top of page

‘நல்ல படம்’ - விமர்சனம்

mediatalks001
18 hours ago
2 min read

ஹரிஷ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் A. அழகுபாண்டியன் தயாரிப்பில்

C. பிரபுராம் இயக்கியுள்ள திரைப்படம் ‘நல்லபடம்’


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் நாயகன் ஹரிஷ் குடி மகன்கள் கொண்டாடும் கடையான டாஸ்மாக் கடையில் மது பாரை நடத்தி வருவதுடன் ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் செயல்பட்டு நண்பர்கள் கல்கி ராஜா மற்றும் அனந்த குமார் ஆகியோருடன் மது குடிப்பவர்களை ஊக்குவித்து அவர்களை தன் சங்கத்தில் உறுப்பினராக்கி வாழ்க்கையில் எதை பற்றியும் கவலைப் படாமல் தினமும் குடித்து கொண்டு வெள்ளை சட்டை வேஷ்டியுடன் எந்த நேரத்திலும் போதையிலேயே இருக்கிறார்


இந்நிலையில் நாயகன் ஹரிஷ் போதையுடன் இருந்தாலும் டாக்டருக்கு படிக்கும் நாயகி தனலட்சுமி அவரை காதலிக்கிறார்.


ஹரிஷ் நண்பர்களுடன் எந்த நேரமும் மது போதையில் இருப்பதால் அம்மாவான ரமா அவரை திருத்த முயற்சி செய்தும் முடியாமல் போய் விடுகிறது.


மது போதைக்கு அடிமையாகும் அனந்த குமாரின் மனைவி இறந்த போதும் அதைப் பற்றி கவலை படாமல் நண்பர்கள் அனைவரும் அந்த நேரத்திலும் மது குடிக்கின்றனர் .


இந்நிலையில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. மதுவுக்கு அடிமையான குடி மகன்கள் அனைவரும் மது கிடைக்காமல் தவிப்பதோடு போதைக்காக மதுவை தேடி அலைகின்றனர் .


இதற்கிடையில் மது குடிக்காமல் திருந்தி வாழ முயற்சி செய்யும் நாயகன் ஹரிஷ் புதிய தொழிலை தொடங்குகிறார் .


இதனால் ஹரிஷின் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் அவருக்கான மரியாதையும் கிடைக்கிறது.


இந்நேரத்தில் நாட்டில் மது கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அரசின் செய்தி தீயாய் பரவ மதுப்பழக்கத்தை மறந்த ஹரிஷ் மீண்டும் தன் நண்பர்களுடன் மது போதையில் முழ்கினாரா ?


மது குடிக்காமல் திருந்தி வாழ முயற்சி செய்து புதிய தொழிலை தொடங்கிய ஹரிஷ் சமுகத்தில் மரியாதையுடன் வாழ்ந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘நல்ல படம்’



நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ் இளமை துள்ளும் நடிப்பில் வெள்ளை சட்டை வேஷ்டியுடன் அறிமுக நடிகரை போல இல்லாமல் காதல் , நடனம் , ஆக்ஷன் என தேர்ந்த நடிகராக இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்


நாயகியாக நடித்திருக்கும் தனலட்சுமி கதைகேற்றபடி அளவான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா , அனந்த குமார், மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி என நடித்த நடிக, நடிகையர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் இசையும் , ஒளிப்பதிவாளர் இனியன் J ஹாரிஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற சங்கத்தை தொடங்கி தினமும் மது போதையில் திளைக்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து குடி குடியை கெடுக்கும் , குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பதை ஆழமாக சொல்வதுடன் , நாடு முழுவதும் மது விலக்கை அமல் படுத்தி மதுவுக்கு அரசு தடை விதித்தால் மட்டுமே மதுப்பழக்கத்தில் மூழ்கியிருக்கும் குடி நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்கிற கருத்தை அழுத்தமாக பதிவு செய்து சமுக விழிப்புணர்வுடன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் C. பிரபுராம்


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page