
நாயகன் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டில் மனைவி திரிஷாவுடன் வாழ்ந்து வரும் நிலையில்,, 12 வருடங்களுக்குப் பிறகு அஜித்குமாருடன் வாழ விருப்பமில்லாத திரிஷா அவரை விட்டு பிரிவதாக சொல்கிறார் .
ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் அஜித்குமார் பிறகு விவாக ரத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
ஒருநாள் திரிஷா தன் குடும்பத்தை பார்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல நினைக்கிறார்.
இதனால் இருவரும் காரில் நெடுந்தூரம் பயணமாக செல்லும் போது வழியில்
ஒரு இடத்தில் பெட்ரோல் பங்கில் தமிழ் பெண்ணாக இருக்கும் ரெஜினா கசாண்ட்ராவை திரிஷா சந்திக்க ,,அவர் தன் கணவனான அர்ஜுனை அவருக்கு அறிமுகபடுத்துகிறார்.
இதன் பின்அஜித்குமாரும்,திரிஷாவும் வறண்ட பாலைவனப் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். செல்லும் வழியில் கார் பழுதடைந்து விடுகிறது.
இந்த சமயத்தில் அந்த சாலையில் மிகப்பெரிய டிரக் வாகனத்தில் வரும் அர்ஜூன் மற்றும் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ரா அவர்களின் நிலைமையறிந்து சந்திக்கும்போது உதவி செய்வதாக கூறி அருகில் இருக்கும் காபி ஷாப்பில் திரிஷாவை இறக்கிவிடுவதாக அஜித்குமாரிடம் சொல்லி திரிஷாவை மட்டும் உடன் அழைத்துச் செல்கிறார்கள்..
இந்நேரத்தில் பழுதடைந்த காரை சரி செய்யும் அஜித்குமார் அவர்கள் திரிஷாவை இறக்கி விட்டு செல்வதாக சொன்ன காபி ஷாப்பிற்கு சென்று திரிஷாவை தேடி பார்த்தால் அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ரெஜினா கசாண்ட்ராவால் திரிஷா கடத்தப்பட்டிருக்கும் உண்மை அவருக்கு தெரிய வருகிறது.
முடிவில் கடத்தப்பட்ட மனைவி திரிஷாவை அஜித்குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை விறுவிறுப்பான ஆக்க்ஷனுடன் சொல்லும் படம்தான் ‘விடா முயற்சி ’
அர்ஜுன் என்ற கதாபாத்திரமாக கதையின் நாயகனாக நடித்துள்ள அஜித்குமார் இயல்பான நடிப்பில் மனைவி திரிஷாவின் மனதை புரிந்துக்கொண்டு அவரது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதும், மனைவி திரிஷா கடத்தப்பட்டவுடன் பதட்டம், பரிதவிப்பு ,போராட்டம் , அதிரடியான ஆக்க்ஷன் என அனைத்து காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
கதைகேற்றபடி சிறப்பான நடிப்பில் கயல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷா
மிரட்டும் வில்லத்தனத்தில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் , அர்ஜுன் மனைவியாக நடித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ராவும் வில்லத்தனமான நடிப்பில் பாராட்டை பெறுகின்றனர் .
வில்லனாக ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் , ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர் .
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும் , அனிருத்தின் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும் கதையின் வேகத்திற்கு துணையாய் இருக்கிறது .
கடத்தப்பட்ட மனைவியை கண்டுபிடிக்க போராடும் நாயகனின் கதையை மையமாக வைத்து விறுவிறுப்பான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லராக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி.
ரேட்டிங் - 3.5 / 5
Comments