‘டிராகன்’ - 3.5 / 5 விமர்சனம் !
- mediatalks001
- Feb 22
- 2 min read

பள்ளியில் 12ம் வகுப்பில் இறுதி தேர்வில் முதல் மாணவனாக திகழ்ந்த மரியம் ஜார்ஜ் மகனான பிரதீப் ரங்கநாதன் தன்னுடன் படிக்கும் மாணவியிடம் காதலை சொல்ல அந்த மாணவியோ நன்றாக படிக்கும் மாணவனான உன்னை பிடிக்கவில்லை படிக்காமல் ரெளடித்தனம் செய்யும் இன்னொரு மாணவனைத் தான் பிடித்தமானவன் என சொல்லி பிரதீப் ரங்கநாதனின் காதலை நிராகரித்து விடுகிறார்.
இதன் பின் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் பிரதீப் ரங்கநாதன் பேராசிரியர் மிஷ்கின் தலைமையில் இயங்கும் கல்லூரியில் படிக்கிறார் .
கல்லூரியில் அடிதடியில் பெயரெடுத்து மாணவர்கள் மத்தியில் டிராகன் என்கிற பெயரில் கெத்தாக சுற்றுகிறார் .
இதே கல்லூரியில் படிக்கும் மாணவியான அனுபமா பரமேஸ்வரனை காதலிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கல்லூரியை முடிக்கும் நேரத்தில் ஒரு பிரச்சனையில்பேராசிரியர் மிஷ்கினை முறைத்து கொண்டு படிக்கும்
பாடத்தில் 48 அரியரோடு கல்லூரியை விட்டு வெளியே வருகிறார்.
இந்நிலையில் இரண்டு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களின் உதவியுடன் பெற்றோரை ஏமாற்றி வாழும் நேரத்தில் கல்லூரி காதலி அனுபமா பரமேஸ்வரன் பிரதீப் ரங்கநாதனின் நடவடிக்கைகளால் அவரை விட்டு பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன் செய்த துரோகத்தின் வலியால் பிரதீப் ரங்கநாதன் தன் காதல் தோல்விக்காக ஐடி நிறுவனத்தில் வேலையில் சேர முடிவு செய்கிறார்.
கல்லூரியில் படித்து முடித்தற்கான போலி சான்றிதழை தயார் செய்து கெளதம் வாசுதேவ மேனன் பொறுப்பில் இருக்கும் மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார் பிரதீப் ரங்கநாதன்.
தான் வேலை செய்யும் ஐடி நிறுவனம் முலமாக லட்சக்கணக்கில் சம்பளம், அடுத்தடுத்த ப்ரொமோஷன், வீடு, கார் என பிரதீப் ரங்கநாதனின் வாழ்க்கை முன்னேற்றம் அடைகிறது.
இவரின் வளர்ச்சியை பார்க்கும் தேனப்பன் மிக பெரிய தொழில் அதிபரான கே எஸ் ரவிக்குமாரிடம் அவரது குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்க கே எஸ் ரவிக்குமார் தன் மகளான கயாடு லோஹரை பிரதீப் ரங்கநாதனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.
இந்த நேரத்தில் கல்லூரியின் முதல்வரான மிஷ்கின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது .
முடிவில் கல்லூரியின் முதல்வரான மிஷ்கினால் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு ஏற்பட்ட சங்கடமான பிரச்சனை என்ன ?
செல்வந்தரான கே எஸ் ரவிக்குமார் மகளுக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘டிராகன்’
நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மாணவனாக , கல்லூரியில் படிக்கும் இளைஞனாக, இயல்பான காதல் நாயகனாக என அனைத்திலும் அழகாக ராகவன் என்கிற கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வாழ்கிறார் .
நாயகிகளான வரும் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இளசுகளை ஏங்க வைக்கும் கயாடு லோஹர் கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார்கள் .
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மிஷ்கின் ,விஜே சித்து, ஹர்ஷத் கான்.இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு தரம் .
இன்றைய சமூகத்தில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் குற்றங்களால் இன்றைய இளைஞர்கள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை பாதிக்கபடுவதை கதையாக கொண்டு தெளிவான அழுத்தமான திரைக்கதை அமைப்பில் படம் பார்க்கும் அனைவரும் பாராட்டும்படியான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து
ரேட்டிங் - 3.5 / 5
Comments