
குடும்பத்துடன் தாய் ,தந்தை அண்ணன் ,அண்ணி என மகிழ்ச்சியாக வாழும் நாயகி ரூபா கொடவையூர் நாயகன் நரேந்திர பிரசாத்தை மனதார காதலிக்கிறார் .
ஒருநாள் இவர் காதலனுடன் இருப்பதை ஊரில் உள்ள ஒருவர் பார்த்து அவரது அப்பாவிடம் பார்த்ததை சொல்ல , ரூபா கொடவையூர் அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார் நாயகி ரூபா கொடவையூர் .
தற்கொலை செய்து கொண்டது வெளியே தெரிந்தால் போலிசாரால் ஏற்படும் தொல்லையை நினைக்கும் குடும்பத்தார், ரூபா கொடவையூருக்கு ஏற்கனவே இருந்த ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக ஊர் மக்களிடம் சொல்கிறார்கள். ஊர் மக்களும் நம்பி விடுகிறார்கள்.
இறுதிச் சடங்குகள் முடிந்து சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்ல தயாராகும் போது, இளைஞர்கள் யாரும் தூக்க முடியாத அளவுக்கு சடலம் கனமாக இருப்பதோடு, திடீரென்று சடலத்தில் அசைவுகள் தெரிகிறது.
இதனால் துக்க வீட்டில் சற்று சலசலப்பு ஏற்பட, மீண்டும் சடலத்தை தூக்க முயற்சிக்கும் போது அந்த சடலம் எழுந்து உட்கார்ந்து விடுகிறது.
இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிறது. துக்க வீட்டுக்கு வந்த ஊர் மக்கள் யாரும் அவர் அவர் வீட்டுக்கு திரும்பி செல்லாமல் அங்கேயே இருக்க, மறுபக்கம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்பவரை அழைத்து வந்து, என்னாச்சு என்று பார்க்க சொல்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்த சடலத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணின் சடலம் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என சொல்கிறார்.
போலீசுக்கு தகவல் தெரிந்து அவர்கள் விசாரிக்க தொடங்கும் நிலையில் ஊர் மக்கள் எதிர்க்கும் நிலையில் இறந்து போன காதலியை பார்க்க வருகிறார் காதலன் நரேந்திர பிரசாத்.
முடிவில் அதன்படி, இறந்த நாயகி ரூபா கொடவையூரின் சடலம் அவரது குடும்பத்திற்கு என்ன சொல்ல வருகிறது ?
உண்மையில் ரூபா கொடவையூர் தற்கொலை செய்து கொண்டாரா ? வேறு மர்ம நபரால் கொல்லப்பட்டாரா ? என்பதை சுவாரஸ்யமாக ரசிக்கும்படி சொல்லும் படம்தான் ‘எமகாதகி’.
குடும்ப பாங்கான முகம் கொண்ட கதையின் நாயகியாக நடிக்கும் ரூபா கொடவையூர் இயல்பான நடிப்பில் உயிரற்ற உடலாக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரூபாவின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத்,
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அப்பாவாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா ஆகியோருடன் ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக தங்களது இயல்பான நடிப்பில் கிராமத்து மக்களாக திரைக்கதைக்கு பக்க பலமாக திரையில் பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ், இசையும், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
ஒரு தான் வாழ்ந்த இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக கொண்டு அந்த சம்பவங்களுடன் பார்வையாளர்களை இயல்பாக பயணிக்க வைத்து எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான அனைவரும் ரசிக்கும்படியான திரைக்கதை அமைப்பில் விறு விறுப்பான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்,
ரேட்டிங் - 3.5 / 5
留言