top of page

‘’ஜீப்ரா’’ - விமர்சனம் !

  • mediatalks001
  • Nov 23, 2024
  • 1 min read

நாயகி பிரியா பவானி சங்கரும் நாயகன் சத்யதேவும் காதலர்களாக இருக்கும் நிலையில்  சத்யதேவ்  பாங்க் ஆஃப் டிரஸ்ட் எனும் தனியார் வங்கியில் வேலை செய்கிறார் .

இன்றைய கணினி உலக வங்கி முறை பண பரி வர்த்தனை அனைத்தும் கற்று தேர்ந்த நுணுக்கமான அறிவு கொண்டவராக இருக்கிறார் நாயகன் சத்யதேவ்


இந்நேரத்தில் மற்றொரு வங்கியில் வேலை செய்யும் அவரது காதலியான ப்ரியா பவானி சங்கர் கணக்கில் தவறாக நான்கு லட்சம் ரூபாய் பணத்தைஒருவருக்கு  மாற்றுகிறார். 


அந்தப் பணத்தை வைத்திருப்பவர் தவறான கணக்கில் வந்தரூபாய்   நான்கு லட்சம்  திருப்பி தராமல் பிரச்சனை செய்கிறார் . 


இந்த பிரச்சனையில் சத்யதேவ் சாமர்த்தியமான   திறமையை பயன்படுத்தி  நான்கு லட்சம்  பணத்தை தனக்கே உரிய முறையில் மீட்டெடுத்து பிரியா பவானி சங்கரை காப்பாற்றுகிறார். 


மற்றொரு பக்கம் இந்த பண விவகாரத்தில் மிக பெரிய கேங்க்ஸ்டர் டாலி தனஞ்சயாவுக்கு  தொடர்பு இருப்பது பின்னால் சத்யதேவுக்கு தெரிய வருகிறது .


சத்யதேவ் செய்த பண பரிவர்த்தனையில் டாலி தனஞ்செயாவிற்கு ஐந்து  கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட அதை நான்கு நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் சத்யதேவை கொன்று விடுவதாக மிரட்டுகிறார் டாலி தனஞ்செயா.

இறுதியில் டாலி தனஞ்செயா சொன்ன  நான்கு நாட்களுக்குள் ஐந்து  கோடி ரூபாயை நாயகன் சத்யதேவ் தன் திறமையால் அவருக்கு கொடுத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’ஜீப்ரா’’


கதாபாத்திரத்துடன் இணைந்து இயல்பான நடிப்பில் நாயகன் சத்யதேவ்,


நாயகியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்,  ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில்  கேங்க்ஸ்டராக வரும்  டாலி தனஞ்சயா,ஏ டூ ஒய் பாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் ,வில்லத்தனம் கலந்த காமெடியில் சுனில் வர்மா ,நடிகர் சத்யா,கருடா ராம் ,ஜெனிபர், சுரேஷ் மேனன் என நடித்த நடிகர்களுடன் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையும், ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்  

 

நாயகன் தன் காதலிக்காக செய்யும் பண பரிவர்த்தனை மோசடியால் ஏற்படும் பிரச்சனைகளால் சிக்கி கொள்ளும் நாயகனின் கதையை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில்  எதிர்பாராத திருப்பங்களுடன்  அனைவரும் ரசிக்கும்படியான படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்.

 

.ரேட்டிங் - 3 / 5


 



Comments


©2020 by MediaTalks. 

bottom of page