‘தொடரும்’ - விமர்சனம்
- mediatalks001
- 5 days ago
- 1 min read

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த ஸ்டண்ட் கலைஞரான மோகன்லால் படப் பிடிப்பு சமயத்தில் நடக்கும் ஒரு விபத்தினால் ஸ்டண்ட் தொழிலை தொடராமல் சில வருடங்களுக்கு பின் மனைவி ஷோபனா , கல்லூரி செல்லும் மகன் மற்றும் பள்ளியில் படிக்கும் மகள் என தேனியில் குடும்பத்தோடு குடியேறுகிறார்.
குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தைப் போலவே தான் வைத்திருக்கும் பழைய கருப்பு நிற அம்பாசிடர் கார் மீதும் அதிகமான பாசம் வைத்திருக்கிறார் மோகன்லால். அந்த காரை டாக்சியாக பயன்படுத்தி தனது வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்
இந்நிலையில் மோகன்லால் ஊரில் இல்லாத போது கார் மெக்கானிக் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் காரில் கஞ்சா வைத்து சிக்கிக் கொள்ள, காரை கைப்பற்றுகிறது போலீஸ். காரை தர முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார் எஸ் ஐ பினு.
அதன்பிறகு, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மா காரின் சாவியை கொடுக்க, அதனைத் தொடர்ந்து தான் ஒரு திருமணத்திற்கு செல்லவிருப்பதாகவும் அங்கு தங்களை கொண்டு செல்லுமாறும் மோகன்லாலிடம் பிரகாஷ்வர்மா கேட்க, அவரும் சரி என்று சொல்லி விடுகிறார்.
இந்த பயணத்தில் மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது..
முடிவில் அந்த பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையால் அமைதியான மோகன்லால் அதிரடி நாயகனாக மாறும் படம்தான் ‘தொடரும்’
டாக்சி டிரைவராக நடித்திருக்கும் மோகன்லால் எதார்த்தமான நடிப்பின் முலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.ஒட்டுமொத்த கதையையும் தன் தோளின் மீது சுமந்து சென்றிருக்கிறார் மோகன்லால்.
மோகன்லாலின் மனைவியாக நடித்திருக்கும் ஷோபனா, மகனாக நடித்த தாமஸ் மேத்யூ மற்றும் மகளாக நடித்த அம்ரிதவர்ஷினி இவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, இளவரசு கதைக்கு பக்க பலம் .
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
ஆரம்பத்தில் எளிமையான குடும்ப கதையாக நகரும் படத்தை காட்சிகள் செல்ல செல்ல ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக அனைவரும் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி .
ரேட்டிங் - 3.5 / 5
Comments