top of page

'தடயம்' இணையத் தொடர் -விமர்சனம்

  • mediatalks001
  • 1 day ago
  • 2 min read

அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் இயக்குநர் .நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி,விஷாகன், புலிப்பாண்டி  ஆகியோர் நடிப்பில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும்  ’தடயம்’ இணையத் தொடர் .


1999 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக  சமுத்திரக்கனி வேலை செய்து வருகிறார். 


அந்த காவல் நிலையத்திற்கு புதியதாக இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று வரும் ஷிவதாவிடம் . சமுத்திரகனியை பற்றிய தவறான செய்திகளை சக காவலர்கள் சொல்கிறார்கள்.


இந்நிலையில்  ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவர் கொலை செய்யப்படுகிறார்கள்.கொலையாளி வேறு எதையும் திருடிச் செல்லாமல் மனைவியின் தாலியையும் கணவனின் அரைஞாண் கயிற்றையும் திருடிச் செல்கிறான்.


இதனையடுத்து இந்த கொலை வழக்கு குறித்து சப் இன்ஸ்பெக்ட்டர் சமுத்திரக்கனி விசாரணையை மேற்கொள்ளும்போது அவருக்கு உறுதுணையாக இன்ஸ்பெக்டர் ஷிவதா இருக்கிறார். இதே போல அடுத்து ஒரு  கணவன்  மனைவி  கொலை கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கொலை நடப்பதால்  இதை செய்வது யார் என்று தெரியாமல் போலீஸ் திணறுகிறார்கள்.


அந்த கொலைகளைப் பற்றி சமுத்திரகனியும் , ஷிவதாவும் விசாரிக்க ஆரம்பிக்கும் பொழுது 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக தான் இந்த கொலைகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் இந்த கொலையோடு சேர்த்து சுமார் 65 கொலைகளுக்கு மேல் கொலையாளிகள் கொலை செய்திருக்கின்றனர் என்ற உண்மையையும் அது குறித்து எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் இருப்பதையும் கண்டு இருவரும்  அதிர்ச்சி அடைகின்றனர்.


இறுதியில் யார் எதற்காக இத்தனை கொடூரமாக கொலை செய்தார்கள்? இந்த கொலைகளை செய்த கொலையாளியை சமுத்திரகனியும் , ஷிவத வும் கண்டுப்பிடித்தார்களா? என்பதே 'தடயம்' இணையத் தொடரின் மீதிக்கதை.


எஸ் ஐ அதியமான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நேர்மையுள்ள காவல் அதிகாரியாக  கதாபாத்திரத்துடன்  இணைந்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். 


இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஷிவதா  இயல்பான நடிப்பால் கவர்கிறார்.


கொடூர கொலையாளிகளாக நடித்திருக்கும்  ராஜ் திரன் தாஸ், பிரேம் இருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் இருவரும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்கள்.


ஆந்திர அமைச்சரராக வரும் அழகன் தமிழ்மணி, போலீஸ் உயரதிகாரியாக வரும் மூணாறு ரமேஷ், டிரைவராக  வரும்  புலிப்பாண்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் வியின் பாஸ்கர்  பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 


ஒளிப்பதிவாளர் கேகே ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கு வகையில் இருக்கிறது.


உண்மைச் சம்பவத்தை மைய கருவாக வைத்து அரசியல்  சார்ந்த  அதிகார வர்க்கத்தினால் சாமானிய மனிதன் பாதிக்கப்படும் பின்னணியையும் , அதில் இருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை, ஒவ்வொரு அத்தியாயத்திலும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அழுத்தமாக பதிவு செய்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்படி இணையத் தொடரை இயக்கியுள்ளார் இயக்குநர்  நவீன் குமார் பழனிவேல் 


ரேட்டிங் : 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page