‘மாமன்’ - விமர்சனம்
- mediatalks001
- 1 day ago
- 2 min read

கதையின் நாயகனான சூரி உடன் பிறந்த சகோதரியான தன் அக்கா
ஸ்வாசிகா மீது அதிகளவு பாசத்துடன் இருக்கிறார்.
இந்நிலையில் திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவான ஸ்வாசிகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
ஸ்வாசிகாவின் ஒரே தம்பியான சூரி தாய் மாமன் என்கிற முறையில் அக்கா மகன் பிரகீத் சிவன் மீது அதிகமான பாசத்துடன் அன்பு காட்டுகிறார்.
மாமன் சூரி பிரகீத் சிவனை காலையில் பள்ளிக்கு சென்று விடுவது முதல் இரவு தன்னுடன் துங்குவது வரை பெற்றோரை விட அன்பாக கவனித்து கொள்கிறார் .
இந்நேரத்தில் மகப்பேறு மருத்துவரான நாயகி ஐஸ்வர்யா லஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் தாம்பத்திய இல்லற வாழ்வில், பிரகீத் சிவனால் பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா லஷ்மிக்கும் , ஸ்வாஷிகாவுக்கும் பிரகீத் சிவனின் காதணி விழாவில் மிக பெரிய வாக்கு வாதம் ஏற்பட,,அதன் பின் ஸ்வாசிகா இருவரிடமும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார் .
இந்த பிரச்சனையால் ஐஸ்வர்யா லஷ்மி தன் வேலையை வெளியூருக்கு மாற்றம் செய்ய ,,,,, மனைவிக்காக சூரி குடும்பத்தை விட்டு பிரிந்து
ஸ்வாசிகா தொடர்பில்லாமல் ஐஸ்வர்யா லஷ்மியுடன் வெளியூரில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா லஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோஷமான சூரி தன் தாயான கீதா கைலாசத்திடம் சொல்ல,,,,
மகிழ்ச்சியான கீதா கைலாசம் மகளான ஸ்வாசிகாவிடம் சொல்வதற்கு அவரது வீட்டுக்கு செல்ல அங்கு ஸ்வாசிகாவின் மகனும் தன் பேரனான பிரகீத் சிவன் சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார் .
முடிவில் கீதா கைலாத்திடம் பேரனான பிரகீத் சிவன் சொன்னது என்ன ?
பிரகீத் சிவன் சூரியிடம் பாசமாக இருப்பதால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா / என்பதை சொல்லும் படம்தான் ‘மாமன்’
கதையின் நாயகனான சூரி உணர்வுப்பூர்வமான செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான குணசித்திர நடிப்பின் மூலம் அக்கா மகன் மற்றும் அக்கா குடும்பத்தின் மீது காட்டும் அன்பை போல் மனைவியின் குணத்தை புரிந்து கொள்ளாததை உணர்ந்து கலங்கும் காட்சிகளில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் சூரி உடல் மொழியில் 'இன்பா' கதாபாத்திரமாக படம் முழுவதும் வாழ்கிறார்
கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லஷ்மி.
கதையின் முக்கிய அழுத்தமான கதாபாத்திரத்தில் சூரியின் அக்காவாக ஸ்வாசிகா.
இவர்களுடன் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர்
இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் மற்றும்
பின்னணி இசை கதையோட்டத்திற்கு பக்க பலம் .
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
தாய்மாமனின் உறவை மையப் படுத்திய கதையுடன் அழுத்தம் கொண்ட குடும்ப உறவுகளின் உணர்ச்சிமயமான திரைக்கதை அமைப்பில் கண்களை கலங்க வைக்கும் காட்சிகளுடன் தாய்மார்கள் பாராட்டும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்.
ரேட்டிங் - 3.5 / 5
Commentaires