top of page

‘ஏஸ்' - விமர்சனம்

  • mediatalks001
  • May 23
  • 2 min read

ஜெயிலில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி மலேசியா நாட்டிற்கு வரும் விஜய் சேதுபதியை ஏர்போர்ட்டில் சந்திக்கும் யோகி பாபு தன் வீட்டில் தங்க இடம் கொடுத்து சமையல் வேலைக்காக திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேர்க்கிறார்.


இந்நிலையில்  விஜய் சேதுபதி பஸ்ஸில் செல்லும் போது ஒரு திருட்டு பிரச்சனையில்  ருக்மணி வசந்துடன் வாக்குவாதம் ஏற்பட, தான் தங்கியிருக்கும் வீட்டின் அருகே ருக்மணி வசந்த் குடியிருப்பதால் அடிக்கடி  இருவரும் சந்திக்க நேரிட  நாளடைவில் இருவரின் சந்திப்பு  காதலாக மாறுகிறது. 


மலேசியாவில் உயர் தர துணி கடையில் வேலை பார்க்கும் ருக்மணி வசந்த் போலீசான தன் வளர்ப்பு தந்தை பப்லு பிரித்விராஜால் ஏற்படும் பிரட்சனையால் மிக பெரிய தொகை தர வேண்டிய சூழ்நிலையில் அவர் அவதிபடுவதை அறிகிறார் விஜய் சேதுபதி 


இந்நேரத்தில் விஜய் சேதுபதி தன் காதலியின் பண தேவைக்காக யோகி பாபு உறவினர் ராஜ்குமார் முலமாக மலேசிய தாதா அவினாஷிடம் வட்டிக்கு பணத்தை கடன் வாங்க செல்கிறார் . 


 கடன் வாங்க சென்ற இடத்தில் தாதா அவினாஷிடம் சூதாட்டத்தில் தோற்று ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி அவரிடம் கடனாளியாகி விடுகிறார். 


தாதா அவினாஷுக்கு ஒரு வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் நிலையில், வங்கிக்கு பணத்தை எடுத்து செல்லும் வண்டியிலிருந்து கோடிகணக்கான பணத்தை  கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார். 


முடிவில் விஜய் சேதுபதி வங்கிக்கு பணத்தை எடுத்து செல்லும் வண்டியிலிருந்து  திட்டமிட்டபடி முழு பணத்தையும் கொள்ளையடித்தாரா?


தன் காதலி  ருக்மணி வசந்தின்  பண தேவையை பூர்த்தி செய்து  அவரை பிரச்சனையிலிருந்து காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஏஸ்’.



போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்கும்   விஜய் சேதுபதி காதல் காட்சிகளிலும் , ஆக்க்ஷன் காட்சிகளிலும்  இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார் .



நாயகியாக ருக்மணி வசந்த் கதையுடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பில் இயல்பாக நடிக்கிறார .


கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  யோகி பாபு வரும்  காட்சிகள் அனைத்துமே  காமெடியால் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கின்றனர் .


திவ்யா பிள்ளை, வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் . 


ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத் கலர்புல்லான ஒளிப்பதிவில் மலேசியா நகரமே ரசிகர்கள் கண் முன்னே ஜொலிக்கிறது .


 ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


தன் காதலியின் பண தேவைக்காக ஏற்படும் பிரச்சனையில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் நாயகனின் கதையை வைத்து ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் ரசிக்கும்  காமெடி கலந்த கமர்ஷியல் ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆறுமுககுமார். 


 ரேட்டிங் -  3.5 / 5

Opmerkingen


©2020 by MediaTalks. 

bottom of page