top of page

‘மையல்’ - விமர்சனம்

  • mediatalks001
  • May 24
  • 1 min read



இரவு நேரத்தில் ஆடுகளை திருடி விற்று பிழைப்பை நடத்தும் கதையின் நாயகனான சேது ஒரு கிராமத்தில் ஆட்டை திருடும்போது கிராம மக்களுக்கு  பயந்து ஒரு கிணற்றுக்குள் குதித்து விடுகிறார் .

இந்நிலையில் கிணற்றில் தண்ணிர் எடுக்க வரும் கிராம மக்களால் ஒதுக்கப்பட்டு காட்டில் வாழும் மந்திர கிழவியின் பேத்தியான  நாயகி சம்ரிதி தாரா அவரை காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் .


இதற்கிடையில் P L தேனப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு வாரிசு இல்லாத தன் சொந்த சித்தப்பாவை அடியாட்களை வைத்து கொலை செய்கிறார் .


மற்றொருபக்கம் நாயகி சம்ரிதி தாரா நாயகன் சேதுவை கண்டதும் காதல் கொள்ள இருவரின் காதலுக்கு அவரது பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார் .


ஒரு கட்டத்தில் சில நாட்களுக்கு பின் சேதுவை அவரது சொந்த ஊருக்கு அவரது பாட்டி வழியனுப்பி வைக்க நாயகி சம்ரிதி தாரா சேதுவை பிரிந்த ஏக்கத்தில் இருக்கும் நிலையில் , தன் சொத்துகளை விற்று  தன் ஆசை காதலியை திருமணம் செய்து கொண்டு திருந்தி வாழ நினைக்கும் சேது  அவரது கிராமத்துக்கு வரும் போது  போலீஸ் பிடியில் P L தேனப்பன் செய்த கொலைக்கு சந்தேகத்தின் பேரில் கொலையாளியாக கைதாகிறார் .


முடிவில் P L தேனப்பன் செய்த கொலைக்கு கொலையாளியாக கைதான சேது அவ் வழக்கிலிருந்து மீண்டு வந்தாரா ?

திருட்டு தொழிலை தொடராமல் திருந்தி வாழ்ந்து தான் ஆசைப்பட்டபடி நாயகி சம்ரிதி தாராவை சேது திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘மையல்’


கதையின் நாயகனாக நடிக்கும் சேது இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


நாயகியாக நடிக்கும்   சம்ரிதி தாரா அழகிலும் நடிப்பிலும் கவனம் பெறு மளவில்  இயல்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .


வில்லனாக P L தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி ,ரத்ன கலா,சி எம் பாலா என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .


அமர் கீத் இசையும் ,பால பழனியப்பனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


ஆடு திருடும் ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக கொண்ட கதையுடன் ஜெய மோகனின் கதை , திரைக்கதை ,வசனத்துடன் , கதையில் உயிருடன் தீ வைத்து எரிக்கும் கொடூர குணம் கொண்ட போலீசார் இருப்பார்களா? என்கிற கேள்வியுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் A P G ஏழுமலை.


ரேட்டிங் - 2.5 / 5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page