’ஆகக் கடவன’ - விமர்சனம்
- mediatalks001
- May 24
- 2 min read

கள்ளக் குறிச்சியில் வாழ்ந்து வரும் விவசாயின் மகனான ஆதிரன் சுரேஷ் நண்பர்களான சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஆகியோருடன் சென்னையில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் வேலை பார்க்கும் மருந்தக கடையின் உரிமையாளர் தன் மகளின் திருமணத்தை நடத்த தேவைப்படும் பணத்திற்காக கடையை நடத்தி வரும் இவர்களுக்கே இந்த மருந்தகத்தை விற்றுவிட நினைக்கிறார்.
இதற்கிடையில் வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் மூவரும் இளைஞர்களை கடத்தி அவர்களை வைத்து பணம் திருடுவதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
இதனையடுத்து ஆதிரன் சுரேஷ் நண்பர்களான சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஆகியோர் அந்த மருந்தகத்தை வாங்குவதற்காக ரூ.6 லட்சத்தை திரட்டுகிறார்கள். ஆனால், அந்த பணம் திருட்டு போய் விடுகிறது.
ஆதிரன் சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார் . அங்கு விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்க, விவசாய நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தருவதாக ஆதிரன் சுரேஷின் தந்தை கூறுகிறார்.
அந்த பணத்தை வாங்குவதற்காக ஆதிரன் சுரேசும் , ராகுலும் இரு சக்கர வண்டியில் கிராமத்திற்கு செல்கின்றனர்.
கிராமத்திற்கு செல்லும் வழியில் வண்டியின் டயர் பஞ்சராகி விட, ஆளில்லாத அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருக்கும் பஞ்சர் கடைக்கு
ஆதிரன் சுரேஷும் ராகுலும் வண்டிக்கு பஞ்சர் போட அங்கு செல்ல , வில்லன்களான வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் S மூவரும் அங்கு இருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் பஞ்சர் போடப்பட்டு ஆதிரன் சுரேசும் , ராகுலும் வண்டி எடுத்து திரும்பும் வழியில் சில மணி துளிகளில் பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்று போகிறது .
பெட்ரோலுக்காக அவர்கள் இருவரும் மீண்டும் அந்த இடத்திற்கே வர , அங்கு ராகுல் காணாமல் போகிறார் . அதற்கு முன் இவர்களது நண்பன் ராஜ சிவனும் அங்குள்ள மூவரிடம் மாட்டி கொள்கிறார் .
முடிவில் ஆதிரன் சுரேஷ், நண்பன் ராகுலை கண்டுபிடித்து அவரை காப்பாற்றினாரா ?
வில்லன்களான மூவரிடம் இருந்து அனைவரும் தப்பித்தது எப்படி ? என்பதை சொல்லும் படம்தான் ’ஆகக் கடவன’
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஆதிரன் சுரேஷ் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நண்பர்களாக நடிக்கும் சி.ஆர்.ராகுல், ராஜசிவன், மிரட்டும் வில்லனாக வரும் வின்சென்ட் S, சதிஷ் ராமதாஸ் மற்றும் மைக்கேல் ஆகியோருடன்
பஞ்சர் கடை பையனாக நடித்திருக்கும் தஷ்ணா, ஆதிரனின் தந்தை , காவலர் வேடத்தில் நடித்திருப்பவர் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
லியோ வி.ராஜா ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
பிரபஞ்சத்தில் நாம் அனைவரும் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வலிமை உண்டு என்பதை மைய கருவாக வைத்து படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்ளும் படியான திரைக்கதை அமைப்பில் ஒரு தரமான படைப்பாகதிரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தர்மா
ரேட்டிங் : 3. 5 / 5
Comments