‘லைன்மேன்’ - ஒடிடி ''ஆஹா'' விமர்சனம் !
- mediatalks001
- Nov 24, 2024
- 1 min read

கடல் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டிணத்தில் உள்ள கடலுக்கு அருகில் உப்பள பகுதியில் இருக்கும் அரசாங்க மின்சார நிலையத்தில் லைன்மேனாக சார்லி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மின் பொறியியல் பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார்.
அதற்காக பொதுவான தெருவில் உள்ள மின் விளக்குகள் ஜெகன் பாலாஜி கண்டுபிடிப்பில் ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான தானியங்கி கருவி ஒன்றை உருவாக்குகிறார்.
அவரது கண்டுபிடிப்புக்கு அரசாங்க அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கும் அவருக்கு செல்லும் இடம் எல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்கிறது.
இறுதியில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஜெகன் பாலாஜியின் கண்டுபிடிப்பு வெற்றி பெற்றாலும், பண வியாபாரிகளின் தலைவனான விநாயக் ராஜ் அவரை வளர விடாமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார் .
முடிவில் விநாயக் ராஜின் சதித்திட்டத்தை முறியடித்து நாயகன் ஜெகன் பாலாஜி தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘லைன்மேன்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி நடிப்பில் அறிமுகம் கதாபாத்திரத்துடன் இணைந்து உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
கலெக்டராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன், நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன்,விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், மேலும் படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர் .
ஒளிப்பதிவு விஷ்ணு கே ராஜா, இசை தீபக் நந்தகுமார், எடிட்டிங் சிவராஜ் ஆகியோரது பணி சிறப்பு .
ஒரு இளம் விஞ்ஞானியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையை வைத்து தூத்துக்குடி உப்பள தொழில் வேலை செய்யும் மக்களின் இயல்பான வாழ்வியலுடன் இன்றைய சமூக சீர்கேடான நாயகன் கலெக்டர், முதல்வர் என மனு கொடுத்தும் எந்த வித பலனும் இல்லாமல் தன் கண்டுபிடிப்பின் அங்கீகாரத்திற்காக போராடும் காட்சிகளை மிக இயல்பான திரைக்கதை அமைப்பில் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார்கள் உதய் குமார் மற்றும் தயாரிப்பாளர் வினோத் சேகர்.
இப்படத்தை ஒடிடி பிளாட்ஃபார்ம் ஆஹாவில் பார்க்கலாம்.
ரேட்டிங் - 3.5 / 5
Comments