top of page

’மெட்ராஸ் மேட்னி’ - விமர்சனம்

  • mediatalks001
  • 6 days ago
  • 1 min read

முதியோர் இல்லத்தில் வாழும் கதாசிரியரான சத்யராஜ் இயல்பான மனிதனின் வாழ்க்கையை கதையாக எழுத நினைக்கிறார்.


நடுத்தர குடும்பத்தை சேர்ந்த காளி வெங்கட் சென்னையில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறார் . இவரது மனைவி ஷெல்லி இவர்களுடைய மூத்த மகள் ரோஷினி இளைய மகன் விஷ்வா என வாழ்ந்து வருகிறார்கள்.


கல்லுரி படிப்பை முடித்த காளி வெங்கட்டின் மகள் ரோஷினி பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.


மகன் விஷ்வா, 12 ஆம் வகுப்பு முடிந்து கல்லூரியில் சேர காத்துக் கொண்டிருக்கிறார்.


தனது மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வரும் காளி வெங்கட். மாப்பிள்ளை சரியாக அமையாததால் மகளின் திருமணம் தள்ளி போகிறது .

இந்நிலையில் ஒருபக்கம் மகன் படிப்பிக்காக பணம் தேவைப்படுகிறது. மறுபக்கம் மகளுக்கு திருமணம் செய்து வைக்க பணம் தேவைப்படுகிறது.

முடிவில் காளிவெங்கட் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினாரா? மேற்கொண்டு மகனை படிக்க வைக்க தேவையான பணம் அவருக்கு கிடைத்ததா ?இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’மெட்ராஸ் மேட்னி’


ஆட்டோ ஓட்டுநராக கதையின் நாயகனாக நடித்திருக்கும் காளி வெங்கட் நடுத்தர குடும்ப தலைவரின் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .. கதாசிரியர் ஜோதி ராமையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.


காளி வெங்கட்டின் மகளாக ரோஷினி காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர், மகனாக வரும் காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் கிஷோர், அரசியல்வாதியாக வரும் கீதா கைலாசம், ஐடி நிறுவன அதிகாரியாக நடித்திருக்கும் அர்ச்சனா, மின்வாரிய அலுவலக அதிகாரியாக நடித்திருக்கும் சுனில் சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக நடித்திருக்கும் சாம்ஸ், மதுமிதா என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்,. ஆனந்த்.ஜி.கே ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.


இயல்பான ஒருவனின் எதார்த்த வாழ்க்கையை மையக்கருவாக வைத்து குடும்பபாங்கான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திகேயன் மணி



ரேட்டிங் : 3 / 5

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page