‘கட்ஸ்’ - விமர்சனம்
- mediatalks001
- Jun 13
- 2 min read

நேர்மையான போலீஸ் அதிகாரியான நாயகன் ரங்கராஜ் பிறக்கும் போது அவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார். தனது தாயின் ஆசைப்படி படித்து நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆகிறார்.
இந்நிலையில் ரங்கராஜ் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கும் ஆசிரமத்தில் நான்ஸியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்
திருமண தம்பதிகள் இருவரும் அதே ஆசிரமத்தில் வளர்ந்த ஆதரவற்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லபடுகிறார் .
இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ்.
கொலை செய்யப்பட்டவர் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தனது விசாரணையை தொடங்கும் போது இந்த கொலையை செய்தது பிரபல தொழிலதிபர் ஒருவர் என்று கண்டறியும் ரங்கராஜ், அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இந்நேரத்தில் கர்ப்பிணியான தன் காதல் மனைவி, ஒரு வளர்ப்பு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
நாயகன் ரங்கராஜ் கைது செய்து சிறையில் அடைத்த பிரபல தொழிலதிபர் ஒரு மணி நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வந்து ரங்கராஜ் மனைவியை கொலை செய்து விடுகிறார்.
முடிவில் நாயகன் ரங்கராஜ் கர்ப்பிணியான தன் காதல் மனைவியை கொலை செய்த தொழிலதிபரை பழி தீர்த்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘கட்ஸ்’
அறிமுக நாயகனாக இயக்கத்துடன் நடித்திருக்கும் ரங்கராஜ் விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன் மீன் விற்பவராக துணிச்சலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் .
போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் ,தாய் மாமாவாக வரும் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
மனோஜ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
பெண்ணின் வீரம், விவசாயத்தை காப்பாற்றுதல்,, தாயின் பாசம் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் என அனைத்தும் கலந்த கதை அமைப்பில் அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரங்கராஜ்.
ரேட்டிங் : 3 / 5
Comments