top of page

’அதோமுகம்’ - விமர்சனம்


ஊட்டியில் தேயிலை எஸ்டேட்டில் மேலாளராக வேலை செய்யும் நாயகன் எஸ்.பி.சித்தார்த் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஏதாவது ஒரு வகையில் மனைவியை ஆச்சரியப்படுத்த அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் Hidden APP ஒன்றை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தான் வீட்டில் இல்லாதபோது அவரது தினசரி நடவடிக்கைகளை பதிவு செய்து, அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி மனைவிக்கு அன்பாக பரிசளிக்க முடிவு செய்கிறார்

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் சித்தார்த்திற்கு,,, வீட்டில் இருக்கும் மனைவியை வீடியோவில் பார்க்கும்போது மனைவியை சந்திக்க யாரோ ஒருவன் வீட்டுக்கு வருவதும் அவனுடன் சகஜமாக மனைவி பேசுவதையும் பார்த்து அதிர்ச்சியடைகிறார் சித்தார்த்

ஒரு கட்டத்தில் நாயகி சைதன்யா தன்னை சந்திக்க வந்த இளைஞரை கொலை செய்துவிடுகிறார்.

நாயகி சைதன்யா செய்த கொலையை நாயகன் சித்தார்த் செய்த கொலையாக அவர் மீது கொலை பழி விழுந்து தேடப்படும் குற்றவாளியாக போலீசார் சித்தார்த்தை தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.

முடிவில் நாயகன் சித்தார்த் மனைவி சைதன்யாவிற்கு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் உள்ள தொடர்பு என்ன ?

அந்த இளைஞரை சைதன்யா கொலை செய்ததற்கான காரணம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’அதோமுகம்’

நாயகனாக நடிக்கும் எஸ்.பி.சித்தார்த் அறிமுக நாயகன் என்று சொல்ல முடியாத அளவிற்கு தேர்ந்த நடிகராக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னைச் சுற்றி ஏன் பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது என்று புரியாமல் குழம்புவதும் ,,கோபமடைந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பதும் , அனைத்தும் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் நிற்கதியாய் துடிக்கும்போதும் அனைத்து உணர்வுகளுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடிகும் சைதன்யா பிரதாப் தொடக்கத்தில் அப்பாவியாக இருப்பவர் அடுத்தடுத்த காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் மிரட்டுகிறார்.கணவனை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுப்பவர், இமைக்கும் நேரத்தில் கோணத்தை மாற்றி இன்னொருவனை கொல்லும் காட்சியில் உறைய வைக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் சிறைக் கைதியாக வரும் அருண்பாண்டியன் படத்தின் இறுதி காட்சியில் தோன்றி நாயகனுக்கு துணை நிற்கிறார்.

சித்தார்த்தின் நண்பராக நடிக்கும் ஆனந்த் நாக், அவரது அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார், சரித்திரன் என மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

இசையமைப்பாளர் முரளி இசையில் பாடல்களும் ,சரண் ராகவனின் பின்னணி இசையும் படத்தின் கதை ஓட்டத்திற்கு துணை நிறைகிறது. அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவு, க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற மிரட்டல் !


எப்பொழுதும் இணைய தொடர்பில் இருக்கும் கணவன் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எடுக்கும் விபரீத முடிவால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் அனைவரும் பாராட்டும்படி சிறப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சுனில் தேவ்.

ரேட்டிங் : 3.5 / 5


bottom of page