திரைப்பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் 'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடரில் இதற்கு முன்பு வந்துள்ள செல்லுலாய்டு மற்றும் தொலைக்காட்சி தொடர்களை விஞ்சும் வகையில் புதிய உயரத்திற்கு எடுத்து வர உள்ளார். இந்தத் தொடருக்கு 'பானி பூரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் இருப்பதனால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலாஜி வேணுகோபால் உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் கதையில் உள்ள திருப்பங்கள் மற்றும் தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மூலம் குடும்பப் பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அனுபவமாக இது அமையும் என்று உறுதியளிக்கிறது.
'பானி பூரி' தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு, குடும்ப உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த கதை சொல்கிறது. பாலாஜி தனது டிரேட்மார்க்கான கதை சொல்லல் முறை, நகைச்சுவையான ஒன்-லைனர் மற்றும் அனைத்து வயதுடைய பார்வையாளர்களும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தொடரை அமைத்துள்ளார்.
'பானி பூரி' தொடருக்கு நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இந்தத் தொடரை ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. நம்பிக்கைக்குரிய வகையில், வளர்ந்து வந்து கொண்டிருக்கும் தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் இது (Shortflix) ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நடிகர்கள்
லிங்கா,
சம்பிகா,
இளங்கோ குமரவேல்,
கனிகா,
வினோத் சாகர்,
ஸ்ரீகிருஷ்ண தயாள்,
கோபால்
தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம்: பாலாஜி வேணுகோபால்,
இசையமைப்பாளர்:
நவ்நீத் சுந்தர்,
ஒளிப்பதிவு: பிரவீன் பாலு,
படத்தொகுப்பு: பி.கே,
ஒலி வடிவமைப்பு & கலவை: ராஜேஷ் முக்கத்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்:
சரவணன் வசந்த்,
ஆடைகள்: தீபிகாஷி,
நிர்வாக தயாரிப்பாளர்: செல்லதுரை,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்:
கருப்பையா சி ராம்,
தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட்
Comments