இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’
- mediatalks001
- 9 hours ago
- 1 min read

நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள்.
இந்தப் படத்தில், கேரி டி'ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய பகுதிகளுக்கு ரகசியமாகச் செல்ல வேண்டும். அங்கு அவர்களின் பார்ட்னர்ஷிப்பும் சோதனைக்குள்ளாகிறது. படத்தில் ஷகிரா மற்றும் எட் ஷீரனின் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர்கள் ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் மற்றும் தயாரிப்பாளர் யெவெட் மெரினோ ஆகியோரின் ’ஜூடோபியா 2’ படத்தில் ஃபார்ச்சூன் ஃபீம்ஸ்டர், குயின்டா பிரன்சன் மற்றும் கெஸல்லாக ஷகிரா ஆகியோரின் குரல்களும் இடம்பெற்றுள்ளது.
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இந்தியா நவம்பர் 28 அன்று இந்திய திரையரங்குகளில் பிரத்தியேகமாக ’ஜூடோபியா 2’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.








Comments