top of page

நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கும் 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதை

  • mediatalks001
  • Oct 28
  • 2 min read

ree

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்


கிராமத்து பின்னணியில் பிற்கால 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதையில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார்


எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இதுவரை பார்த்திராத முக்கிய வேடத்தில் தேவதர்ஷினியும், கௌரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர்


திறமை வாய்ந்த கலைஞர்களை அடையாளம் கண்டு தரமான திரைப்படங்களை தயாரித்து வழங்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கலியுகம்' திரைப்படம் பாராட்டுகளை குவித்த நிலையில் புதிய படமொன்றை இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


இப்படத்தை பிரபல மலையாள நடிகை மற்றும் இயக்குநரும், தமிழில் 'கண்ணகி' படத்தில் நடித்தவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றவருமான ஷாலின் ஜோயா இயக்குகிறார். மலையாளத்தில் ஷாலின் ஜோயா இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' திரைப்படம் கவனத்தை ஈர்த்த நிலையில் ஆர் கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 18வது தயாரிப்பின் மூலம் தமிழில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.


கிராமத்து பின்னணியில் பிற்கால 90களில் நடக்கும் நகைச்சுவை ஃபேண்டஸி கதையான இதில் நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் மற்றும் அனிருத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுவரை பார்த்திராத முக்கிய வேடத்தில் தேவதர்ஷினியும், கௌரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர்.


திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே எஸ் ராமகிருஷ்ணா, "இதுவரை நாங்கள் தயாரித்த 17 படங்களும் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டவை, திறமையான கலைஞர்களை ஊக்குவித்தவை ஆகும். அந்த வரிசையில் ஷாலின் ஜோயா இயக்கும் இப்படமும் இடம்பெறும். அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்த திரைப்படம் உருவாகும்," என்றார்.


இயக்குநர் ஷாலின் ஜோயா கூறுகையில், "90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக்கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்ல உள்ளோம். இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. திறமையான கலைஞர்களுடன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.


இப்படத்திற்கு கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார், சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்ள, டி சந்தோஷ் கலை இயக்கத்தை கையாளவுள்ளார். உடைகள்: வி சாய்பாபு; ஒப்பனை: பி பிரசாத்; தயாரிப்பு நிர்வாகி: வி விஸ்வநாதன்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.


ஆர் கே இன்டர்நேஷனல் பேனரில் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நெம்பர் 18' படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page