top of page

ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள 'பிரிடேட்டர் பேட் லேண்ட்ஸ் '

  • mediatalks001
  • 7 hours ago
  • 1 min read

ree

டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது!*


’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.


டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்‌ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது.


இந்தப் படத்தில் எல்லே ஃபேன்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி ஆகியோருடன் திறமையான பல நடிகர்களும் நடிகத்துள்ளனர். படம் பற்றி நடிகர் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோமடங்கி பகிர்ந்து கொண்டதாவது, "ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பிரிடேட்டர் ஃபிரான்சைஸின் இந்தப் படத்தைப் பார்த்து திருப்தி அடைவார்கள் என்று நம்புகிறேன். புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை அறிமுகப்படுத்தவதும் ஐகானிக் கதாபாத்திரங்களை கொண்டாடவும் இந்தப் படம் நிச்சயம் வழிவகுக்கும்” என்றார்.


20த் செஞ்சுரி ஸ்டுடியோ நவம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page