top of page

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

  • mediatalks001
  • 5 hours ago
  • 1 min read

ree

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, தான் நடித்த "பிறந்தநாள் வாழ்த்துகள்" படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மகிழ்கிறார்!


56'வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள இரு படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', மற்றொன்று அப்புக்குட்டி நடித்த 'பிறந்தநாள் வாழ்த்துகள்'.


'அழகர்சாமியின் குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அப்புக்குட்டிக்கு, அதன் பிறகு தற்போது நடித்துள்ள 'பிறந்தநாள் வாழ்த்துகள்' திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்!


இந்தத் தருணத்தில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் இயக்குனர் ராஜு சந்ரா, தயாரிப்பாளர் ரோஜி மேத்யூ மற்றும் தனக்கு கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா அனில் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவிக்கிறார்...


அதேபோல், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் 'ஆநிரை' குறும்பட இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு அவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறார் அப்புக்குட்டி!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page