top of page

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தின் மைலி சைரஸின் 'ட்ரீம் ஆஸ் ஒன்...' அசல் பாடல் வெளியாகியுள்ளது!

  • mediatalks001
  • Nov 15
  • 1 min read

ree

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தில் இருந்து மைலி சைரஸின் 'ட்ரீம் ஆஸ் ஒன்...' அசல் பாடல் வெளியாகியுள்ளது!


ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.


வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார். மனதை வருடும் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸை தனது சமூக ஊடக தளங்களில் மைலி சைரஸ் பகிர்ந்துள்ளார்.


இதுகுறித்து மைலி பகிர்ந்திருப்பதாவது, "இந்தப் பாடலை மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வயட் ஆகியோருடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடல் வரியும் நாம் எங்கிருந்தோம் என்பதையும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது. நம் அனைவருக்கும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கான நம்பிக்கையை இந்தப் பாடல் வைத்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் மிகவும் உணர்வுப்பூர்வமாக இணைந்த ஒரு படத்திற்காக அர்த்தமுள்ள பாடல் ஒன்றை எழுதியது மகிழ்ச்சி" என்றார்.


'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படம் மூலம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மரைன் நவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நவி போர்வீரன் நெய்திரி (சோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் புதிய சாகசத்திற்கு பார்வையாளர்களை பண்டோராவுக்கு அழைத்துச் செல்கிறார். ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் ஆகியோரின் திரைக்கதையையும், ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் & ஜோஷ் ஃப்ரீட்மேன் & ஷேன் சலெர்னோவின் கதையையும் கொண்ட இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர்.


20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்தை டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியிடுகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page