top of page

கோவா திரைப்பட விழாவில் பாராட்டு பெற்ற இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படம்

  • mediatalks001
  • Nov 24, 2025
  • 1 min read



ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் , இ.வி.கணேஷ்பாபு வின் ஆநிரை குறும்படத்தைப்பார்த்து கோவா திரைப்பட விழாவில் பாராட்டு


இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா பிரிவில் அதிகாரபூர்வமாக (Official) தேர்வுசெய்யப்பட்டு முதல் நாள் திரையிடலாக

இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் கோவாவில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.


முன்னதாக

இ.வி.கணேஷ்பாபுக்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதுபற்றி இயக்குனர்

இ.வி.கணேஷ்பாபு

கூறியதாவது.


ஒவ்வொரு சினிமா கலைஞனும் வாழ்வில் ஒருமுறையாவது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா.கோவாவில் பங்கேற்க வேண்டும்.


அரிதான பல படைப்புகளும், தரவுகளும், சர்வதேச சினிமா வியாபாரத்துக்கான வாய்ப்புகளும், பொக்கிஷங்களாக கொட்டிக்கிடக்கிறது இங்கே.

அப்படிப்பட்ட இடத்தில் எனது படம் தேர்வு செய்யப்பட்ட இந்த தருணம் என் வாழ்வில் அற்புதமான தருணம்.


இரவு பகலாக உழைத்த எனது பட்குழுவுக்கு நன்றி.


ஹிந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான அனுபம் கேர் அவர்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்து, படத்தின் பலகாட்சிகளிலும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்திய சினிமாவின் ஆன்மாவை ஆநிரை குறும்படம் பிரதிபலிக்கிது.

பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில் அன்புதான் பெரிது என்று இப்படம் காட்டுகிறது

என்றும் பாராட்டினார்.


இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ச்சுனன் ,தனது பசுமாட்டின் தோலில் செய்யப்பட்ட இசைக்கருவியைக் கண்டு,அதை தனது மாடாகவே கருதி,கதறி அழும் காட்சி

தன்னை நிலைதடுமாற வைத்துவிட்டது என்றும், இனி அப்படிப்பட்ட இசைக்கருவியை தன்னால் வாசிக்க முடியுமா என்று தேரியவில்லை என்றும்,

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைபாளர் மரகதமணி அவர்கள் ஆநிரை பார்த்துவிட்டு என் கதையை பாராட்டியுள்ளார்.


மேலும் வெளிநாட்டு திரைக்கலைஞர்களின் பாராட்டுக்கள் என் திரைப்பயனத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது

இவ்வாறு இ.வி. கணேஷ்பாபு கூறினார்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page