top of page

நடிகர் அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!

  • mediatalks001
  • 21 hours ago
  • 2 min read

ree

ree

ree

சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷின் பிரம்மாண்ட படங்களான நடிகர் அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. இரஞ்சித் இருவரும் 'சூப்பர்ஹீரோ' டைட்டிலை அறிமுகம் செய்தனர்!


இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நெல்சன் இருவரும் பாரத்தின் 'நிஞ்சா' பட டைட்டிலை வெளியிட்டனர்!


நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ். இவர் தயாரித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் உலக பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகள் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ ஆகிய படங்கள் தயாரிப்பில் பிஸியாக உள்ளார்.


நடிகர்கள், படக்குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை (24 நவம்பர், 2025) படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர்கள் நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் 'சூப்பர்ஹீரோ' பட டைட்டிலையும், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் ’நிஞ்சா’ பட டைட்டிலையும் வெளியிட்டனர்.


’சூப்பர்ஹீரோ’ படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் சாண்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும், ரெடின் கிங்ஸ்லி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் மூலம் சினிஷூடன் நீண்டகாலம் பயணித்தவரான விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். ’ஹிருதயம்’ மற்றும் வெளியாகவிருக்கும் ’ஒன்ஸ் மோர்’ படங்களில் பணியாற்றிய ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு தரமான இசையை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை கே.எஸ். சினிஷ் வழங்குகிறார் மற்றும் ஷாஞ்சன் ஜி உடன் இணைந்து தயாரிக்கிறார்.


’ஜமா’, ’வே டு ஹோம்’, மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸின் எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஷ்வரன் ஆகியோருடன் இணைந்து ’நிஞ்சா’ படத்தை தயாரித்து வழங்குகிறார் கே.எஸ். சினிஷ். இந்தப் படத்தை முருகா இயக்குகிறார். இந்தப் படத்தில் பாரத் கதாநாயகனாகவும், பிராத்தனா நாதன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் மற்றும் நெல்சன் படத்தின் தலைப்பை வெளியிட, நிகழ்வில் நடிகர்கள் ஆர்யா, கவின், சந்தீப் கிஷன், ரியோ ராஜ், மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், கலையரசன் மற்றும் கௌஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இயக்குநர்கள் ரவிக்குமார், அபிஷன் ஜீவிந்த், கலை அரசன், சாம் ஆண்டன், டான் சாண்டி, ஸ்ரீ கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன், பிஎஸ் மித்ரன், தமிழரசன் பச்சமுத்து, மடோன் அஷ்வின், ரத்தின சிவ விருமாண்டி, ’பேச்சுலர்’ சதீஷ், ராம்குமார் பாலகிருஷ்ணன், அஷ்வின் ராம், கார்த்திக், நித்திலன் சுவாமிநாதன் மற்றும் வினோத்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மேலும், தயாரிப்பாளர்களான ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன் சாகர், சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா, எஸ்.கே. புரொடக்‌ஷன் கலை, ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மற்றும் கல்யாண், தயாரிப்பாளர் கே.வி. துரை மற்றும் தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் தேவா, எடிட்டர் பிலோமின் ராஜ், ஆக்‌ஷன் கோரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


’பலூன்’ திரைப்படம் இயக்கிய சினிஷ், தனது உதவி இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார். முன்னதாக ’டிக்கிலோனா’ படம் மூலம் கார்த்திக் யோகியையும், ’பார்க்கிங்’ படம் மூலம் ராமையும் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் இப்போது சோல்ஜர்ஸ் பிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் விக்னேஷ் வேணுகோபாலை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page