top of page

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ...!சுகுமாரி”

  • mediatalks001
  • 6 hours ago
  • 2 min read

ree

திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன்,மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ...!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!


சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.


இப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் ( Bharat Dharshan) இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி (Maheswara Reddy Mooli) தயாரிக்கிறார். புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. சிவம் பஜே ( Shivam Bhaje ) வெற்றிக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.


இன்று படத்தின் தலைப்பு “ ஓ சுகுமாரி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள டைட்டில் அறிவிப்பு போஸ்டர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிற இதயத்தை எழுதியபடி அதனை இரண்டு பாகங்களாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல் குறியீடு, பின்னணியில் பெரிய ஆலமரம், கிராம சூழல், ஓடிக்கொண்டிருக்கும் கிராமவாசிகள், இவை அனைத்தும் சேர்ந்து இப்படம் காதல், எமோசன், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.


இந்த படத்திற்காக திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். ரசாகர் (Razakar) மற்றும் பொலிமேரா (Polimera,) போன்ற படங்களில் பணியாற்றிய C. H. குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளராக பணியாற்றிய பரத் மஞ்சிராஜு ( Bharath Manchiraju) இப்படத்திற்கு இசையமைக்கிறார். பலகம் புகழ் திருமாலா M. திருப்பதி கலை இயக்குநராக இணைந்துள்ளார். கா படத்தின் ஸ்ரீ வரப்ரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். ஸ்வயம்பு படத்தில் பணியாற்றி வரும் அனு ரெட்டி அக்கட்டி உடை வடிவமைப்பை கவனிக்கிறார். பிரபல பாடலாசிரியர் பூர்ணசாரி இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுகிறார்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.


நடிகர்கள்


திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு , ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஶ்ரீனிவாஸ், சரண்யா.



தொழில் நுட்பக் குழு


தயாரிப்பாளர் – மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர் – பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு – C.H. குஷேந்தர்

இசையமைப்பாளர் – பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர் – திருமலா M. திருப்பதி

எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத்

உடை வடிவமைப்பாளர் - – அனு ரெட்டி அக்கட்டி

பாடலாசிரியர் – பூர்ணசாரி

மக்கள் தொடர்பு - யுவராஜ்

மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா

Comments


©2020 by MediaTalks. 

bottom of page