top of page

ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் 'LBW- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத்தொடர்

  • mediatalks001
  • 6 hours ago
  • 2 min read

ree

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'LBW- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!


ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள 'LWB- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.


இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


'கனா காணும் காலங்கள்', 'ஹார்ட்பீட்' (சீசன் 1 & 2), 'உப்பு புளி காரம்', 'ஆஃபிஸ்' மற்றும் 'போலீஸ் போலீஸ்' ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட வருகிறது 'LBW'.


சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ கதைப்படி ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர்.


அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


வெற்றிகரமான 'ஹார்ட்பீட்' இணையத்தொடரை தயாரித்த அட்லீஃபேக்டரி 'LBW' தொடரையும் தயாரித்துள்ளது. வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW - லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ’LBW - லவ் பியாண்ட் விக்கெட்’ ப்ரீமியர் ஆகிறது.


ஜியோஹாட்ஸ்டார் பற்றி:


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page