U/A சான்றிதழ் பெற்ற நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'திரெளபதி 2'
- mediatalks001
- 6 days ago
- 1 min read

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'திரெளபதி 2' திரைப்படம் U/A சான்றிதழ் பெற்று வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது!
மோகன் ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'திரெளபதி 2', மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) வெற்றிகரமாக U/A சான்றிதழைப் பெற்று, திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.
பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகியுள்ள 'திரெளபதி 2', CBFC சான்றிதழ் பெற்ற பிறகு படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள்.








Comments