பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தமிழ் திரைப்படங்கள் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!
- mediatalks001
- 4 hours ago
- 2 min read

புதிய ஆண்டு, புதிய திரைப்படங்கள்! 2026 ஆம் ஆண்டுக்கான உரிமம் பெற்ற தமிழ் திரைப்படங்கள் பட்டியலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது!
மும்பை, ஜனவரி 15, 2026: தனது கதை சொல்லல் தரத்தை பிரம்மாண்டமாக தமிழ் சினிமா தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் பட்டியலை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், திறமையான இயக்குநர்கள் மற்றும் மொழிகள் தாண்டி பார்வையாளர்களை சென்றடையும் கதைகள் என பல தரமான படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ரசிகர்களை கவர்ந்த மாஸ் என்டர்டெய்னர்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள் வரை 2025 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது. ’இட்லி கடை’, ’டிராகன்’, ’டியூட்’, ’குட் பேட் அக்லி’ போன்ற ரசிகர்கள் விரும்பிய மாஸ் ஹீரோக்களின் படங்களும் ‘பைசன்’, ’காந்தா’ போன்ற தரமான படைப்புகளும் ரசிகர்களை கவர்ந்தன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் தரமான தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும். இவை தமிழ் கலாச்சாரத்தோடு தொடர்புடைய கதைகள் என்றாலும் உலகளவிலும் பார்வையாளர்களை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படங்களின் பட்டியலை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட்டுள்ளது.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘காரா’, வெங்கி அட்லூரி இயக்கும் ’சூர்யா 46’ மற்றும் ஜித்து மாதவன் இயக்கும் ’சூர்யா 47’, கார்த்தி மற்றும் கல்யாணி இணைந்து நடித்துள்ள அதிரடி ஆக்ஷன்-டிராமா ’மார்ஷல்’, யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ’அன் ஆர்டினரி மேன்’, மேலும் எஸ்.ஜே.சூர்யா நடித்தும் தயாரித்தும் வரும் ’புரொடக்ஷன் நம்பர் 1’ என ஆக்ஷன், டிராமா, கிரைம் மற்றும் நகைச்சுவை என அனைத்தும் இந்தக் கதைகளில் உள்ளது.
திரில்லாகவும், உணர்வுப்பூர்வமாகவும், முழுமையான பொழுதுபோக்காகவும் அமைந்துள்ள இந்த திரைப்படங்கள், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை நெட்ஃபிலிக்ஸ் தளம் மூலம் சென்றடையும்.
இதுகுறித்து நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கத் துறை துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது, “வலுவான, உணர்வுப்பூர்வமான, அசல் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் இந்தியாவிலும் உலகளவிலும் பார்வையிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருவதை நாங்கள் கண்டுள்ளோம். பொங்கலை முன்னிட்டு தொடர்ந்து நான்காவது ஆண்டாக எங்களின் தமிழ் உரிமம் பெற்ற திரைப்பட பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘இட்லிகடை’, ’டியூட்’, ’டிராகன்’, ’பைசன்’ போன்ற படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வருங்காலத்தில் இதுபோன்ற நல்ல கதைகளை திறமையான இயக்குநர்களுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்” என்றார்.
2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல்:
• பெயரிடப்படாத சூர்யா, வெங்கி அட்லூரி படம் (சூர்யா 46): சூர்யா, மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• AGS 28: அர்ஜுன் சர்ஜா, ப்ரீதி முகுந்தன்
(தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்),
• புரொடக்ஷன் நம்பர் 1: ரவி மோகன், எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• டயங்கரம்: வி.ஜே. சித்து (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• கட்டா குஸ்தி 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• இதயம் முரளி: அதர்வா முரளி, காயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• மார்ஷல்: கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• அன் ஆர்டினரி மேன்: யோகி பாபு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத தனுஷ் மற்றும் ராஜ்குமார் படம்: தனுஷ்
(தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• வித் லவ்: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்),
• பெயரிடப்படாத சூர்யா மற்றும் ஜித்து மாதவன் படம் (சூர்யா 47): சூர்யா, நஸ்ரியா நஸீம், நஸ்லென் கே. கஃபூர் (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)
• காரா: தனுஷ், மமிதா பைஜு (தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம்)








Comments