top of page

தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த 'திரௌபதி2' பட குழுவினர்

  • mediatalks001
  • 3 hours ago
  • 1 min read

திரௌபதி2 பட குழுவினர் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்


இயக்குநர் மோகன் ஜி, நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுமாறு தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீடு மற்றொரு தேதிக்கு மாற்றப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார். புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் நேரில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை சந்தித்து, அவரது ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page