top of page

சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு

  • mediatalks001
  • 3 hours ago
  • 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.


முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ' மை லார்ட் ' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் -  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக 'மை லார்ட்' படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்...  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.



Comments


©2020 by MediaTalks. 

bottom of page