top of page

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

  • mediatalks001
  • 12 hours ago
  • 1 min read

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது.


முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள

இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும் பொழுது,


“‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


தயாரிப்பாளர் K.V. சபரீஷ் கூறும் பொழுது,


“இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு பணிபுரிந்து நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். Post production பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.”


தொழில்நுட்பக் குழு


கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன்


திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன்


ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம்


எடிட்டிங்: வி. பூபதி


இசை & பின்னணி இசை: தர்புகா சிவா


கலை இயக்கம்: அன்பு


மேக்கப்: குப்புசாமி


உடை வடிவமைப்பு: ரமேஷ்


தயாரிப்பு நிர்வாகம்: மாரியப்பன் மற்றும் குட்டி கிருஷ்ணன்


மக்கள் தொடர்பு: ரேகா


Post production பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘லகட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஒரு வலுவான, சமூகப் பொறுப்புள்ள திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page