top of page

’டார்க்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 1 day ago
  • 2 min read

எம்.ஜி ஸ்டுடியோஸ், 5 ஸ்டார் – ஏபிவி மாறன், கணேஷ் கே.பாபு தயாரிப்பில் இயக்குநர்  கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில்  அஜய் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டார்க்’  .

சென்னையில் அரசாங்கத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கே.பாக்யராஜிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் திடீரென மற்ற இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அவரும் தீ வைத்து தற்கொலை செய்துக் கொள்கிறார்.


இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் வாடகைக்கு வராமல் இருப்பதால் அந்த வீடு மர்மமும் அச்சமும் நிறைந்த இடமாக மாறுகிறது.


இந்நிலையில் அந்த வீட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்த உண்மை தெரிந்தும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வரும் நாயகன் அஜய் கார்த்திக் வந்த சில நாட்களிலேயே வசிக்கும் இடத்தில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்க பயம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.


இதற்கிடையே, நாயகன் அஜய் கார்த்திக் தன்னைத் தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு இறந்து போக, வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறார்.


சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும் மயங்கி விழுகிறார்.


உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, திடுக்கிடும் இந்த சம்பவத்தையும், தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை குறிப்பிட்டதையும் வைத்துக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல அதிர்ச்சி யூட்டும் திடுக்கிடும் உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது.


இறுதியில் மூன்று இளைஞர்களுக்கான கொலையின் மர்ம பின்னணி என்ன ? அஜய் கார்த்தி எதிர்கொண்ட அமானுஷ்யங்களின் உண்மை என்ன? என்பதுதான் திகிலூட்டும் ’டார்க்’ படத்தின் மீதிக்கதை


கதாநாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்திக் அப்பாவி இளைஞராக இயல்பான நடிப்பில் வீட்டில் அமானுஷ்ய சம்பவங்களை கண்டு பயம் கொள்ளும் போது, அந்த உணர்வை மிக சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி நாளுக்கு நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளையும் தன் நடிப்பில் கச்சிதமாக பிரதிபலித்து அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டு உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, அந்த மர்ம விட்டிற்குள் சென்று விசாரணை மேற்கொள்ளும் காட்சிகளிலும் ,அதன் பிறகு நடக்கும் சம்பங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் இடங்களிலும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.


வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் மறைந்த கே.பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார்.


கே.பாக்யராஜ் மகளாக வரும் அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், நாயகனின் அம்மாவாக வரும் இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் மனு ரமேஷன் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றது போல இருக்கிறது.


ஒளிப்பதிவாளர் ரவி சக்தி ஒளிப்பதிவில் ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை மிக நுட்பமாக படமாக்கியிருக்கிறார்.


ஒரு வீட்டில் நடக்கும் மூன்று இளைஞர்களின் கொலையை மையமாக கொண்ட கதையுடன் காதல், நட்பு, துரோகம், என அனைத்தும் கலந்த திரைக்கதையில் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அடுத்து வரும் காட்சிகளை ஒரு எதிர்பார்ப்புடன் உருவாக்கி அனைவரும் ரசிக்கும் ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் திரில்லர் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன்


மொத்தத்தில் ’டார்க்’ – ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம்


ரேட்டிங் : 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page