நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறப் போகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ மிக பெரிய வெற்றி படமாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது . அதனை தொடர்ந்து, அவரது அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில், சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில், சூர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவீன் நூலி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல கவனத்தை பெற்றுள்ளது.
அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் சூர்யாவின் அடுத்த முக்கிய வெளியீடாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது
ஆகஸ்ட் 14-ம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பினால் ,கருப்பு படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு இந்த படமும் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





Comments