top of page

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ – Google டிரெண்டிங்கில் நம்பர் 1!

  • mediatalks001
  • Jun 25
  • 1 min read


ree

ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!


இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.


மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது.


எழுத்தாளர் ஷாரிஸ் முகமது எழுதியுள்ள இப்படத்தை ,அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியுள்ளார்.


பிரைடல் பொட்டிக் வைத்திருக்கும் 40 வயது முதிரிளம் இளைஞனான பிரின்ஸ் சக்கலக்கல் (திலீப்), இன்றைய ZenG தலைமுறை இளைஞியை (சஞ்சு) மணக்கிறார். இதனால் அவர் வாழ்விலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் திரைக்கதை

பரபர சம்பவங்களுடன், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்படி, வெகு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது.


இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், சோஷியல் மீடியா, குடும்பங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அழகாக பிரதிபலித்திருக்கும் இந்தப்படம், தமிழக மக்களின் வாழக்கையையும் பிரதிபலிப்பது போல அமைந்திருப்பதால், இப்படத்தின் தமிழ் பதிப்பும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், நடிகை ஊர்வசி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனைத்து வயதினரும் கொண்டாடும் ஃபேமிலி எண்டர்டெயினரான இப்படம், ஜூன் 20 முதல், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.


Google-ல் ரசிகர்களின் விருப்பத் தேடலில், டிரெண்டிங்கில் #1 இடத்தைப் பிடித்திருக்கும் இப்படத்தை, ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தவறாமல் கண்டு ரசியுங்கள்!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page