top of page

பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

  • mediatalks001
  • Jun 26
  • 1 min read

ree

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர், மாமன் ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது!!


ZEE5 தளம், சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், பிளாக்பஸ்டர் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “மாமன்” படத்தை, விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.!!


~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை, ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ~


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.


மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது.


இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.


குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.


மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 தளம் மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாகப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page