top of page

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

  • mediatalks001
  • 2 days ago
  • 1 min read



'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது


' ராஜ குமாரா' , 'கே ஜி எஃப்', 'சலார் ' மற்றும் ' காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள - அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இன்று 'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌


படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது.


படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால்.. இந்த மேக்கிங் வீடியோ - நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.


' காந்தாரா : சாப்டர் 1 ' என்பது ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகும். படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.‌ இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.


அக்டோபர் இரண்டாம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும்.


'காந்தாரா : சாப்டர் 1 'உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து கடந்து செல்கிறது. நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து.. கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கும் என இந்தப் படம் உறுதியளிக்கிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page