top of page

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

  • mediatalks001
  • 9 hours ago
  • 2 min read


ree

ree

ree

ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும் – டாக்ஸிக் (Toxic ) படத்தில், 45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார்.


மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.


பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.


இது குறித்து JJ Perry கூறுகையில்..


“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.


மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.


இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.


“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.


மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.


“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.


வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page