top of page

17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ள சென்னை எடிஷன் கேமிங் திருவிழா

  • mediatalks001
  • 5 days ago
  • 2 min read

ree

ree

ree

ree

சென்னை எடிஷன் கேமிங் திருவிழாவை கிட்டத்தட்ட 17,000 ரசிகர்களுடன் ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறைவு செய்துள்ளது!


உலகளாவிய அறிவுசார் சொத்து மற்றும் சமூக கட்டமைப்பாளரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30–31 அன்று சென்னை வர்த்தக மையத்தில் கேமிங் திருவிழாவின் முதல் பதிப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இரண்டு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் கேமிங், அனிமே, ஸ்டாண்ட்-அப் காமெடி, காஸ்ப்ளே, கலாச்சாரம் மற்றும் இசை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


விளையாட்டு முதல் காஸ்ப்ளே, நேரடி ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என சென்னை வர்த்தக மையமே திருவிழாக்கூடமாக மாற்றியது. அங்கு ரசிகர்கள் வெறுமனே பங்கேற்கவில்லை. நிகழ்வை அவர்கள் கொண்டாடி, ஒன்றாக நினைவுகளை உருவாக்கினர்.


கல்லூரி மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு ஒன்று கூடினர். இந்த நிகழ்வு மூலம் கேமிங் மற்றும் அனிமே வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது கலாச்சார பகிர்ந்தளிப்பாகவும் மாறியது நிரூபணமாகியுள்ளது.


AMD வழங்கிய இந்த நிகழ்வின் டிக்கெட்கள் KYN இல் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த கேமிங் திருவிழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (SDAT) இணைந்து நடத்தப்பட்டது. சென்னை AGS சினிமாஸ் தியேட்டர் பார்ட்னராக ஆதரவு கொடுத்தது.


கேமிங் திருவிழா நிறைவடைந்தது குறித்து ஸ்கைஸ்போர்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷிவா நந்தி பேசியதாவது, “கேமிங் மஹோத்சவின் முதல் பதிப்பு சிறந்த முறையில் நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சி. சாதாரண விளையாட்டாளர்கள் மற்றும் மின் விளையாட்டுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும், கேமிங், அனிமே மற்றும் கலாச்சாரம் ஒன்றாகவும் இந்த நிகழ்வை உருவாக்கினோம். நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எனர்ஜியும், பல கலாச்சாரங்களின் ஒன்றிணைவும் நிகழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியது. அடுத்து, செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவிலும் இந்த நிகழ்வை நடத்த இருக்கிறோம்" என்றார்.


இந்த விழாவில் மேகந்தா ரெட்டி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்), டேரெஸ் ஏ. (தலைமை நிர்வாக இயக்குனர், கைடன்ஸ் தமிழ்நாடு) மற்றும் காயத்ரி தியாகராஜன் (நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, கின்ஹுட் டெக்னாலஜிஸ்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு வரவேற்றனர். இது தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக கேமிங் மற்றும் மின் விளையாட்டுகள் வளர்ந்து வருவதையும் இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.


நிகழ்வின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:


* ரசிகர்கள் அரங்கத்தில் வீரர்களை உற்சாகப்படுத்துவது போலவே, BGMI, Valorant மற்றும் பிற டைட்டில் கொண்ட LAN போட்டிகளில் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.


* சிறந்த படைப்பாளிகள் மற்றும் அனிமே நிபுணர்களால் மதிப்பிடப்பட்ட அற்புதமான ஆடைகளுடன் நாடு முழுவதிலுமிருந்து காஸ்ப்ளேயர்களைக் கொண்டுவரும் பான்-இந்தியா காஸ்ப்ளே போட்டியாகவும் இது நடைபெற்றது.


* இந்தியாவின் முதல் முழு அர்மகெதோன் வடிவ சதுரங்கப் போட்டியான ரெட் புல் அர்மகெதோன், சென்னையில் 350க்கும் மேற்பட்ட வீரர்களை ஒன்றிணைத்தது. மேலும், சர்வதேச மாஸ்டர் டானியா சச்தேவ் மற்றும் கிராண்ட் மாஸ்டர் எம். ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இந்த நிகழ்வை வழிநடத்தினர்.


* உள்ளூர் தமிழ் கலைகளுடன் அனிமே மற்றும் கேமிங் ஒன்றிணைந்தது.


* டீம் தமிழாஸ், ஆட்டோபாட்ஸ் இஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்ட் எஸ்போர்ட்ஸ் ஆகியவற்றிற்காக தனியான மீட் & கிரீட் பூத்!


* PVR சினிமாஸ் பங்கேற்பாளர்களுக்காக உள்ளூர் உணவுகள் கொண்ட ஸ்டால்களை அமைத்தது.


* 2027 ஆம் ஆண்டுக்குள் 700 மில்லியன் விளையாட்டு வீரர்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அனிமே/காஸ்ப்ளே ஈடுபாடு உயர்ந்து வருவதால், கேமிங் திருவிழா அதற்கான பாதையை முன்னெடுத்துள்ளது.


* ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் மஹோத்சவின் முதல் அத்தியாயம்தான் இந்த கேமிங் திருவிழா. இது பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொச்சி மற்றும் புனே என ஆறு நகர சுற்றுப்பயண கலாச்சார விழாவாகும். இங்கு விளையாட்டு, அனிமே, இசை, காமிக்ஸ் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் சமூக கொண்டாட்டமாகவும் இது அமைகிறது.


ஸ்கைஸ்போர்ட்ஸ் பற்றி:


இ- ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் ஐபி பில்டர். அர்ப்பணிப்புள்ள கேமர்கள் மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர்களால் இயங்கும் இந்த நிறுவனம் கம்யூனிட்டி பில்டிங், ஐபி கிரியேஷன் மற்றும் டெக் தீர்வு போன்ற சேவைகளை கேமர்ஸ், இ-ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் மற்றும் பிராண்டுகளுக்குக் கொடுத்து வருகிறது. ஸ்கைஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலமும், துடிப்பான கேமிங் சமூகத்தை வளர்க்கிறது மற்றும் உலகளாவிய இ-ஸ்போர்ஸில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.


ஸ்கைஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜெட்சின்தசிஸின் ஒரு பகுதியாகும். மேலும் தகவலுக்கு: https://skyesports.in/


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:


வாசிஃப் அஹமது (ஸ்கைஸ்போர்ட்ஸ்- பிஆர் மேனேஜர்)

+91 7389171319

Comments


©2020 by MediaTalks. 

bottom of page