top of page

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் !





கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்" தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!



தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்', 'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மேத்யூ நடிக்கிறார். மற்றும் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினு அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு, இம்பரஸ், பக்தவத்சலன், சுல்பியா மஜீத், ஈஸ்வரி மற்றும் வீரம்மாள் ஆகியோர் நடித்துள்ளனர். இணை தயாரிப்பாளர் மாதன்ஸ் குழுமம், படத்தொகுப்பு தாஹிர் ஹம்சா, இணை இயக்குனர் பினு பாலன், இசை: ஜி.கே.வி., நவநீத், கலை வினோத்குமார், சென்னையைச் சேர்ந்த பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'


@GovindarajPro

Comments


bottom of page