top of page
mediatalks001

’விடுதலை1’ படத்திற்கு மீண்டும் சர்வதேச அங்கீகாரம்!





ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி - சூரி நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை I & II’. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை I & II’ திரையிடப்படத் தேர்வாகியுள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது.

இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.




அதாவது புனேவில் நடைபெற்ற புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பார்ட்1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. நடிகர்களின் திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பார்ட் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments


bottom of page