top of page

’பெத்தி’ - விமர்சனம்

  • mediatalks001
  • Jun 5
  • 2 min read

விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில்   ’பெத்தி’ .


ராம் சரண், ஜான்வி கபூர். சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு , திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர் .


பழங்குடியின மக்களில் ஒருவரான நாயகன் ராம் சரண் கிரிக்கெட் விளையாடுவதில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறார் .


இவருடைய கிராமத்து வழியாக நிற்காமல் செல்லும் ரயிலிலிருந்து எந்த ஒரு போக்குவரத்து வசதியும் இல்லாததாதால் ஊரில் வாழும் பெரியவரான ஜெகபதி பாபு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை பார்த்து ஊர் மக்கள் நலனுக்காக மனு கொடுக்கிறார். அதனால் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது.


இச் சுழலில் திறமையான கிரிக்கெட் வீரராக இருக்கும் ராம்சரண் பணத்தை வாங்கிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார்.


சூழ்ச்சியால் ஏமாற்றப்படும் ராம்சரண், அங்கீகாரம் இல்லாத

பழங்குடியின தனது கிராம மக்களுக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார்.


இந்நிலையில் தனக்கான அடையாளத்தை தேடி குஸ்தி வாத்தியாரான சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்றுக்கொள்கிறார். அதில் சாதனை படைத்து மாநில அளவிலான அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் நேரத்தில் இவருடைய காலில் பாதிப்பு ஏற்படுகிறது.


காலில் ஏற்படும் பாதிப்பினால் ராம் சரண் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.


இறுதியில் ராம் சரண் சதியினால் எதிர்பாராத சோதனைகளை கடந்து பல தடைகளை தாண்டி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ?

தனது அடையாளத்துடன் கிராம மக்களின் நலனுக்காக கிராமத்துக்கு அனைத்து போக்குவரத்து வசதிகளை அங்கீகாரத்துடன் கொண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் ’பெத்தி’ படத்தின் மீதிக்கதை.

இளமை துடிப்பு மிக்க கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ராம்சரண் கம்பீரமான உடற்கட்டில் கிரிக்கெட், மல்யுத்தம் , ஓட்டப்பந்தயம் என அனைத்து போட்டிகளிலும் தன் திறமையை நிரூபிக்க கடுமையான உழைப்பை கொடுத்து இருக்கிறார். பல பரிணாமங்களில் காதல், பாட்டு ,நடனம், கோபம், உணர்வு என கதா பாத்திரத்துடன் இணைந்து படம் முழுவதும் ஜொலிக்கிறார் .


அச்சியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான்வி கபூர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயல்பாக நடித்துள்ளார் .


மல்யுத்த குருவாக நடித்திருக்கும் சிவராஜ்குமார் அனுபவ நடிப்பால் கவனம் பெறுகிறார். ஊர் பெரியவர் ஜெகபதி பாபு, ராம்சரண் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர், திவ்யேந்து சர்மா, பொமன் இராணி, என படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.


ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.


ஊர்மக்களுக்கு அடையாளத்துடன் சேர்ந்த அங்கீகாரத்தை பெற்று தர போராடும் ஒரு விளையாட்டு வீரரின் கதையை மையமாக வைத்து சாதி அரசியல், சமூக ஏற்றத்தாழ்வு , மனித உணர்வுகள், எதிர்ப்பு, ஏமாற்றம், சதி என அனைத்தையும் திரைக்கதையில் அழுத்தமாக பதிவு செய்வதுடன் விறு விறுப்பாக சுவாரஸ்யமான பார்வையாளர்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் ராம் சரணின் ரசிகர்கள் கொண்டாடும் படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் புச்சி பாபு சனா.


மொத்தத்தில் ’பெத்தி’ – தன் மக்களின் அடையாளத்திற்காக போராடும் மண்ணின் மைந்தன்


ரேட்டிங் : 4 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page