தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் கொண்ட மணிகண்டன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். சொந்த பந்தங்களுடன் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் அவருக்கு தூக்கத்தில் குறட்டை விடுவது மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இப் பிரச்சனையால் கேலி கிண்டலுக்கு ஆளாகி வேலை செய்யும் ஐடி கம்பெனி முதல் அருகிலுள்ளவர்கள் அனைவரிடத்திலும் அவமானப்படுகிறார்.
மணிகண்டன் காதலிக்கும் பெண் குறட்டை சத்தத்தினால் அவரை
விட்டு சென்றுவிட,,
மன வருத்தத்தில் இருக்கும் மணிகண்டனை சந்திக்கும் மீதா ரகுநாத் மணிகண்டன் மீது காதல் கொள்ள,,, காதலிக்கும் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனையால் சந்தோஷமான திருமண வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த குறட்டை சத்தத்தினால் மீதா ரகுநாத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.அதனால் ஏற்படும் பிரச்சனையான மோதல்களால் மணிகண்டனும் ,மீதா ரகுநாத்தும் பிரிய வேண்டிய நிலை உருவாகிறது
முடிவில் மீண்டும் இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா? என்பதை மனதை தொடும் கதையுடன் காமெடி கலந்த வசனங்களுடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படம்தான் ‘குட் நைட்’.
கதையின் நாயகனாக நடித்துள்ள மணிகண்டன் உடல் மொழியில் மிக இயல்பாக உணர்வுபூர்வமுள்ள பல பரிமாண உணர்வுகளுடன் கேலி கிண்டலுக்கு ஆளாகி அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளிலும் நடுத்தர வர்க்க இளைஞனாக,,,,மோகன் என்கிற கதாபாத்திரமாக ரசிகர்களின் கை தட்டலான பாராட்டுதலில் படம் முழுவதும் வாழ்கிறார்.
மணிகண்டனின் மனைவியாக வரும் மீதா ரகுநாத் எதார்த்தமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
ஜாலியான நடிப்பில் முக்கிய வேடத்தில் மணிகண்டனின் மாமாவாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்.. ரமேஷ் திலக்கின் மனைவியாக நடித்துள்ள ரைச்சேல் ரெபேகா, தாத்தாவாக வரும் பாலாஜி சக்திவேல், பாட்டியாக வரும் கவுசல்யா நடராஜன், ஐடி நிறுவனத்தின் மேலதிகாரியாக நடிக்கும் பக்ஸ், மணிகண்டனின் அம்மாவாக நடித்துள்ள உமா ராமச்சந்திரன் என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதையுடன் இணைந்து நடிப்பில் பயணித்திருப்பது படத்திற்கு சிறப்பு !
ஷான் ரோல்டனின் பாடல்களும் கதையின் வேகத்துக்கு இணையான பின்னணி இசையும்,, ஜெயந்த் சேது மாதவனின் சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !!
குறட்டை பிரச்சனையால் பல பிரச்சனைகளை சந்திக்கும் நாயகன்,,,,, இந்த கதையை மையமாக வைத்து நேர்த்தியான ,,சிறப்பான திரைக்கதை அமைப்பில் ,வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கலந்த வசனங்களுடன் நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணிக்குமளவில் காட்சிகள் அமைத்து,, இல்லற வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் அன்பு கலந்த புரிதல்களை உணர்ச்சிமயமான காட்சிகளால் அழகாக வெளிப்படுத்தி மனதை தொடும் இயல்பான கதையுடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்குமளவில் பாராட்டும்படியான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.
ரேட்டிங் ; 4.5 / 5
Comentarios