நாயகி சித்தி இதானி,,,, தற்கொலை செய்து கொண்ட அண்ணனான தருண் கோபியின் மூன்று பெண் குழந்தைகளை படிக்க வைத்து தனியாக வளர்த்து வருகிறார்.
சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது முறைமாமன்கள் திட்டமிட் டு ,,,,திருமணம் செய்து கொள்ள அவரை யார் பெண் கேட்டு வந்தாலும் அவர்களை வெட்டி விரட்டியடிக்கிறார்கள்.
இந் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை கொல்ல முயற்சி செய்யும் விஜய் முருகனின் கையை உடைத்ததற்காக ஜெயிலில் நேரில் சந்தித்து நன்றி சொல்ல முயற்சி செய்கிறார் சித்தி இதானி .
கொலைகார கும்பலான தன் உறவினர்களால் சித்தி இதானியால் ஆர்யாவை ஜெயிலில் சந்திக்க முடியாமல் போகிறது .
ஜாமினில் வெளியே வந்து தன்னை பார்க்க வந்த பெண் யார் என தெரிந்து கொள்ள,,, சித்தி இதானி வசிக்கும் இடத்திற்க்கே ஆர்யா சந்திக்க முயற்சிக்கும் போது,,, முறை மாமன்களான ரிஷியும் ,அர்ஜயும் ஆர்யாவை எதிர்க்க அவர்களை அடித்து பந்தாடுகிறார் ஆர்யா .
இப் பிரச்சனையால் சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்க,,, ஏற்கனவே கொலை வெறியில் இருக்கும் ஆடுகளம் நரேனும் , அவரது மகனான தமிழும் ஆர்யாவை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர் .
முடிவில் சித்தி இதானியின் சொத்துக்கு ஆசைப்படும் உறவினர்கள் ஆர்யாவை என்ன செய்தார்கள் ?
ஆடுகளம் நரேனும் ,அவரது மகனான தமிழும் ஆர்யாவை கொல்வதற்கான காரணம் என்ன ?
ஆர்யா மீது காதல் கொண்ட சித்தி இதானி உறவினர்களை மீறி ஆர்யாவை திருமணம் செய்து கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’
கதையின் நாயகனாக கிராமத்து பின்னணியில் நடித்துள்ள ஆர்யா,,,வழக்கமான பாணியில் படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகனாக அசத்துகிறார் .
நாயகி சித்தி இதானி கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
குணசித்திரமான நடிப்பில் இளைய திலகம் பிரபுவும் , இயக்குனர் கே. பாக்யராஜும் நடித்துள்ளனர் .
வில்லன்களாக ஆடு களம் நரேன் , மது சூதனன் , தமிழ் ,அஜய் ,ரிஷி ,kgf அவினாஷ் , விஜய் முருகன் ,இவர்களுடன் சிங்கம் புலி , விஜி சந்திரசேகர்,ரேணுகா,மீனாள் , தருண் கோபி என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் , வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
நாயகியின் சொத்தை அபகரிக்க முயலும் கொலை வெறி உறவினர்களிடமிருந்து நாயகியை காப்பாற்றும் நாயகன்,,,,அதன் பின் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதையில்,,, அழுத்தமில்லாத அடிக்கடி வெவ்வேறு திசைக்கு மாறும் திரைக்கதை அமைப்புடன்,,,, ஏகப்பட்ட வில்லன்களுடன் அவர்களுக்கு இடையில் உள்ள உறவு முறைகளை உடனுக்குடன் ப்ளாஷ் பேக்கில் சொல்லும்போது குழப்பமடையுமளவில் ரசிகர்களின் தலை சுற்றும் காட்சிகளுடன்,,,வில்லன்களுடன் வாழும் பெண் கதாபாத்திரங்களை கொலை வெறித் தனமான பெண்களாக வடிவமைத்த வகையிலும் ,,, வில்லன்களின் அடியாளாக அரசு வேலையில் பணி புரியும் போலீஸ் அதிகாரியே நாயகனை வெட்ட கையில் அரிவாளுடன் ஒடி வரும் லாஜிக் மீறலுடன்,,,, ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏற்கனவே பார்த்து,,,, பழகிய பழைய ,,,கதையை வழக்கமான முத்திரையுடன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் முத்தையா.
ரேட்டிங் ; 2.5 / 5
Σχόλια