கால் டாக்ஸி டிரைவராக சென்னையில் பணி புரியும் ஜெகன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகி ஈடனின் அழகில் மயங்கி அவரை ஒருதலையாக காதலிக்கிறார்.
ஒரு தலையாய் ஈடனைக் காதலிக்கும் ஜெகன் தன் காதலைச் சொல்ல முடிவெடுக்கும் நேரத்தில்,,,, ஈடன் தன் வேலையை விட்டு சொந்த ஊரான மதுரைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
இந்நிலையில் ஊருக்கு செல்வதற்கு முன்னாள் இரவு பார்ட்டியில் தோழிகளுடன் ஈடன் கலந்து கொள்ள ,,,மறு நாள் நேரம் கழித்து விழித்து
கொள்ள ரயிலை தவற விடுகிறார்.
இந் நேரத்தில் தீபாவளி பண்டிகைக்காக கொண்டாடுவதற்காக நாயகன் ஜெகன் இரு சக்கர வாகனத்தில் மதுரை செல்கிறார். வேறு வழி தெரியாமல் பெற்றோருக்கு பயந்த ஈடன்,,, ஜெகனுடன் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்கிறார் .
இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்லும் வழியில் வில்லன் ராம்ஸ் ஈடனை கடத்துகிறார் .
முடிவில் கடத்தப்பட்ட ஈடனை நாயகன் ஜெகன் கண்டுபிடித்தாரா?
பெற்றோருக்கு பயந்த ஈடன் குறித்த நேரத்தில் மதுரை சென்றடைந்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’துரிதம்’
கதையின் நாயகன் ஜெகன் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க சாலையில் பயணிக்கும் கதையில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஈடனுக்கு கனமான கதாபாத்திரம் கண்டிப்பான அப்பாவுக்கு பயந்து வாழ்ந்தாலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
நண்பனாக வரும் பாலசரவணன், நாயகியின் தோழிகளாக வரும் வைஷாலி,ஶ்ரீநிகிலா,ஐஸ்வர்யா மற்றும் ஏ.வெங்கடேஷ், பூ ராமு,வில்லனாக நடித்திருக்கும் ராம்ஸ் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
நரேஷின் இசை கதையோடு பயணிக்க,,, பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. வாசன் மற்றும் அன்பு டென்னிஸ் ஆகியோர் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக துணை நிற்கிறது.
சாலை வழி பயணத்தை மையமான கதையை கொண்டு விறுவிறுப்பான நேர்த்தியான திரைக்கதை அமைப்புடன் ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்து ரசிகர்களின் பாராட்டுதலுடன் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் சீனிவாசன் .
ரேட்டிங் ; 3 / 5
Comments