top of page

'போர் தொழில்' - மிரட்டும் திரைக்கதை அமைப்பில் கதைக்களம் ! - விமர்சனம் !

Updated: Jun 10


உயர் அதிகாரியாக பொறுப்பேற்கும் அசோக் செல்வனிடம் அனுபவமிக்க கண்டிப்பான அதிகாரி சரத்குமாரிடம் உதவியாளராக இருந்தால் எளிதாக அனைத்தையும் கற்று கொள்ளலாம் என தலைமை அதிகாரியான நிழல்கள் ரவி சொல்கிறார் .

இந்நிலையில் திருச்சியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யபடுகிறார்கள்.

இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உதவியாக அசோக் செல்வனும்,நிகிலா விமலும் திருச்சிக்கு செல்கின்றனர் ,

சரத்குமார் தனி படை அமைத்து இவ் வழக்கை விசாரித்து வரும் நேரத்தில் இளம் பெண்களை மட்டும் குறி வைத்து கொடூரமான முறையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது.

கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல்பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அசோக் செல்வனும். சரத்குமாரும் சாமர்த்தியமாக குற்றவாளியை கண்டுபிடித்து அவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைகின்றனர்


முடிவில்,,, இளம் பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் யார்?


பெண்களை மட்டும் குறி வைத்து கொடூரமான முறையில் அவன் கொலை செய்வதற்கான காரணம் என்ன?


சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் படம்தான் ' போர் தொழில் '




கதையின் முக்கிய கதாபாத்திரமாக சரத்குமார் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக அமைதியான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .


கதையின் நாயகனாக பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன்,,,இதுவரை ஏற்காத வேடத்தில் கதையுடன் இணைந்து ரசிக்கும்படியான நடிப்பில் அனைவரது பாராட்டை பெறுகிறார் !


நாயகி நிகிலா விமல் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !


சரத்பாபு ,பி எல் தேனப்பன் , O A K சுந்தர் . நிழல்கள் ரவி ,சந்தோஷ் கீழட்டூர் , ஹரிஷ் குமார் ,சுனில் சுகாதா என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .


ஜேக்ஸ் பிஜாய்யின் இசையுடன் சேர்ந்த பின்னணி இசையும்,,,, கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !



இளம் பெண்களை அடுத்தடுத்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை அனுபவமிக்க திறமையான அதிகாரியும் , புதியதாக பணிக்கு சேரும் அதிகாரியும் இணைந்து கண்டுபிடிக்கும் க்ரைம் திரில்லர் கலந்த கதையை ,,,,விறு விறுப்பான வேகமான திரைக்கதை அமைப்புடன் படத்தின் ஆரம்பத்தில் இருந்த கதையின் வேகம் இறுதி வரை குறையாமல் அனைவரும் பாராட்டும் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.


ரேட்டிங் ; 4 / 5


'போர் தொழில்'-மிரட்டும் திரைக்கதை அமைப்பில் கதைக்களம் கொண்ட க்ரைம் திரில்லர் !



bottom of page