திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சிறுமலை கிராமத்தில் மக்களுக்கு சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து விழிப்புணர்வு நாடகம் நடத்தும் லியோ சிவகுமார் சினிமாத்துறையில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் அனைத்து இயக்குனர்களுக்கும் கடிதம் மூலம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்கும் நேரத்தில்,,, இயக்குனர் பிரபு சாலமன் இவரது கடிதத்தை பார்த்து துணை இயக்குனராக பணி புரிய சென்னைக்கு வர சொல்லி கடிதம் போடுகிறார் .
இதற்கிடையில் லியோ சிவகுமார் தன் வீட்டிற்கு எதிரில் வசிக்கும் ஐயர் பெண்ணான சஞ்சிதா ஷெட்டி மீது காதல் கொள்கிறார்.
இருவரது பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல,,,
தன் தம்பியை சஞ்சிதா ஷெட்டிக்கு திருமணம் செய்ய நினைக்கும் சஞ்சிதா ஷெட்டியின் சித்தி மட்டும் பிரச்சனை செய்கிறார் .
இதன்பின் லியோ சிவகுமாரும் இயக்குனர் ஆகும் கனவில் சென்னைக்கு செல்ல ,,சென்னையில் உள்ள ஐ டி கம்பெனியில் சஞ்சிதா ஷெட்டிக்குவேலை கிடைக்கிறது .
சென்னைக்கு செல்லும் சஞ்சிதா ஷெட்டி,,, லியோ சிவகுமாரை சந்திக்க ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர் .
திருமண பந்தத்துக்கு பின் ஒரு குழந்தையும் பிறக்க ,,, இயக்குனர் ஆகும் கனவில் இருக்கும் லியோ சிவகுமாருக்கு விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல அழைப்பு வருகிறது .
லியோ சிவகுமாரின் கதையை கேட்கும் விஜய் சேதுபதிக்கு சொல்லும் கதை பிடித்து போக ,,, என்னுடைய தயாரிப்பாளர் உங்களிடம் பேசுவார் . அதன் பிறகு படத்திற்கான வேலையை ஆரம்பியுங்கள் என வாழ்த்தி வழியனுப்புகிறார் .
முடிவில் விஜய் சேதுபதி சொன்ன தயாரிப்பாளர் லியோ சிவகுமாருக்கு போன் செய்தாரா ?
தமிழ் சினிமா துறையில் வெற்றி பட இயக்குனராக வலம் வர கனவு கண்ட லியோ சிவகுமாரின் ஆசை நிறைவேறியதா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'அழகிய கண்ணே '
கதையின் அறிமுக நாயகன் லியோ சிவகுமார் நடிப்பில் தேர்ந்த நடிகரை போல இயல்பான நடிப்பால் சிறப்பாக நடித்துள்ளார் .
கதைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சிதா ஷெட்டி காதலியாக,,, இளம் மனைவியாக,,, ஒரு குழந்தைக்கு தாயாக,,,வெவ்வேறு பரிமாண நடிப்பில் ரசிகர்களின் மனதில் நிற்கிறார் .
இயக்குனராக பிரபு சாலமன் , நடிகராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்கள் .
அமுதவாணன் , சிங்கம் புலி , ஆண்ட்ரூஸ் , ராஜ்கபூர் நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் ,ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க துணை !
இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் நாயகனது கதையில்,, காதல் , குடும்பம் ,,என முதல் பாதியில் இருந்த திரைக்கதையின் வேகம் இரண்டாம் பாதிக்கு பின் கதை திசை மாறி தடு மாறும் திரைக்கதை அமைப்பில் ,,, வெற்றி பட இயக்குனராக வலம் வர முயற்சி செய்யும் நாயகன் வாழ்வில் ஒரு குழந்தை பிறந்த பின்பும் சாதிய வன்கொடுமையான காட்சிகள் தேவையா என கேட்க தோன்றும்படி இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆர்.விஜயகுமார்.
ரேட்டிங் ; 2.5 / 5
Comments