top of page

’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ - விமர்சனம்!

சிங்கப்பூரில் உடல் உறுப்புக்களை திருடும் கும்பலை சேர்ந்த மருத்துவர்கள் மர்ம நபரால் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்வதில் தீவிர விசாரணையை மேற்கொள்கிறார் ..


மறுபக்கம், நாயகி நபிஷா ஜுலாலுதீன் சிங்கப்பூரில் உள்ள ஒரு  டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்த  நிறுவனத்தின்  மூலம்   வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் அவருக்கு கொடுக்கிறார்கள்.


அதன்படி சென்னைக்கு வரும் நபிஷா ஜுலாலுதீன் மெடிக்கல் ஷாப் நடத்தும் நண்பரை சந்திக்கும் இடத்தில் ஜோ ஜியோவன்னி சிங் நாயகியை பற்றி விசாரிக்கிறார்.


இதன்பின் சிங்கப்பூரில் எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா நபிஷா ஜுலாலுதீன் ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார்.


ரியோ ராஜுடம் ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார். நபிஷா ஜுலாலுதீன் சொல்படி திருட செல்லும் ரியோ ராஜ் அந்த வீட்டின் உரிமையாளரான சைக்கோ கொலைகாரனான குணாளனிடம் மாட்டி கொள்கிறார் .


மறுபுறம் தன்னை ஏமாற்றிய இயக்குனரை  தேடி பழிவாங்க  நினைக்கும் ஜோ ஜியோவன்னி சிங் உடல் சோர்வுக்காக மாத்திரை சாப்பிட்டு படுக்கிறார்.


இதனையடுத்து  சில நாட்கள் கடந்த நிலையில்  சிங்கப்பூரில் மருத்துவ மனையில் சிகிச்சை. பெறுகிறார்  ஜோ ஜியோவன்னி சிங் .


முடிவில் நாயகி  நபிஷா ஜுலாலுதீன் தம்பி ரியோ ராஜை சைக்கோ கொலைகாரனிடம் இருந்து காப்பாற்றினாரா? மருத்துவர்களை கொலை செய்த கொலையாளியை காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’  


சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் நடித்திருக்கும் ரியோ ராஜ் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் . காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ் கம்பீரமாக நடித்திருக்கிறார்.கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் இயல்பாக நடித்திருக்கிறார்.


முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ஜோ ஜியோவன்னி சிங் ஹாலிவுட் நடிகர் போல் இருந்தாலும் 'நாளை நமதே' எம்.ஜி.ஆர்  படத்தை பார்த்து  அழுது கொண்டே நடிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்! பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் ஒளிப்பதிவு தரம் !


சிங்கப்பூரில் நடக்கும் கதையாக,,,,,,,,, அழுத்தமில்லாத சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் காமெடியான காட்சிகளுடன் முடிவில் அனைத்துமே கனவு என்ற ரீதியில் புதுமையாக இயக்குனர் ஜோ ஜியோவன்னி சிங் படத்தை முடித்திருப்பதை பாராட்டலாம் !


ரேட்டிங் ; 2 / 5

Comments


bottom of page