மலை மேல் உள்ள கீழ் மலை கிராமத்தில் தபால்காரராக வேலையில் சேருகிறார் காளி வெங்கட்.
பாமர மக்கள் அதிகம் வாழும் அந்த கிராமத்தில் அவர்களது தொல்லை தாங்க முடியாமல் மேலிடத்தில் பணி மாறுதல் கேட்டு போராடுகிறார் காளி வெங்கட்..
இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து மலை உயரத்தில் வசிக்கும் வயதான பெண்மணிக்கு வரும் கடிதத்தை கொடுக்க நடந்தே செல்கிறார். மலை மேல் ஏற முடியாமல் நொந்து போய் திணறும்போது வழியில் வரும் பிச்சைக்காரன் மூர்த்தி மூலம் கிராமமே குலசாமியாக கொண்டாடும் மாதேஸ்வரன் பற்றி கேள்விப்படுகிறார்.
150 வருடத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் மலை வாழ் மக்களுக்கு இந்தியாவின் முதல் ஹர்காராவாக (தபால்காரராக) பணிபுரிந்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கொடுமையால் கிராமத்தின் மத்தியில் அவர் கொடூரமாக கொல்லப்படுவதை கேள்விபட்டவுடன் தன் முடிவை மாற்றிக்கொள்கிறார் காளி வெங்கட்.
முடிவில் கிராம மக்கள் ஹர்காராவான மாதேஸ்வரனை குலசாமியாக கும்பிட காரணம் என்ன ?
கிராமத்தை விட்டு செல்லும் முடிவில் இருந்த காளி வெங்கட் கிராம தபால் நிலையத்தில் தன் பணியை தொடர்ந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஹர்காரா'
அறியாமையினால் வாழும் மலைவாழ் மக்களுக்காக தபால்காரராக பணிபுரியும் காளி வெங்கட் 33 வயதை கடந்தும் திருமணமாகாத ஏக்கத்தை இயல்பான நடிப்பில் காளி வெங்கட் படும் காமெடி கலந்த கஷ்டம் உணர்பூர்வமான குணசித்திர நடிகராக அசத்துகிறார் !
மலை கிராமத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் ஹர்காராவாக பணி செய்து உயிர் தியாகத்தினால் கிராம மக்களின் குல சாமியாக வாழ்ந்து வரும் மாதேஸ்வரன் கதாபாத்திரமாக வாழ்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோ நடிப்புடன் சேர்ந்து இயக்குனராக படத்தின் ஒவ்வொரு காட்சியின் கதையை சொல்லிய விதத்தின் திறமையை பாராட்ட தோன்றுகிறது .
குறிப்பாக சிலம்பாட்ட சண்டைகாட்சியினை படமாக்கிய விதம் சூப்பர் !
vrk ரமேஷ் கலை பணியும் , ராம்சங்கரின் இசையும் , இயற்கை வனத்தை அற்புதமாக படமாக்கிய பிலிப் சுந்தர்.மற்றும் லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவும் கதையின் பக்க தூணாக நிற்கிறது !
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுவாழ்ந்த நம் மக்கள் அடைந்த துன்பங்களையும் துயரங்களையும் உணர்பூர்வமாக இயல்பாக சொல்லும்போது படம் பார்க்கும் ரசிகர்களையே காட்சிகளில் அதிர்ச்சியடைய செய்கிறது . சில காட்சிகளில் திரைக்கதையில் தொய்வு இருந்தாலும் படத்தின் முடிவில் வரும் காட்சிகள் உணர்வோடு கைதட்டி ரசிக்க வைக்கிறது.
இயக்குனரின் முயற்சிக்காக அனைவரும் பார்க்க வேண்டிய படம் 'ஹர்காரா'
ரேட்டிங் ; 3 / 5
Comentários