top of page

’மார்க் ஆண்டனி’ - பட விமர்சனம்!


விஞ்ஞான ஆராய்ச்சியாளரான செல்வராகவன் திருமணமான மனைவியை கூட கண்டுகொள்ளாமல் டைம் டிராவல் தொலைபேசி ஒன்றை கண்டுபிடிக்கிறார்.


இந்த தொலைபேசி மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு பேச முடியும் . ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே இந்த தொலைபேசியில் ஒரு நபரை தொடர்பு கொள்ள முடியும்.


இந்நிலையில் ஒருநாள் கிளப்பில் இருந்து தான் கண்டுபிடித்த தொலைபேசியுடன் வெளியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு செல்வராகவன் இறந்து விடுகிறார்.


மிக பெரிய தாதாவாக இருந்து இறந்து போன அப்பா விஷாலின் (ஆண்டனி) மகனான மெக்கானிக்காக இருக்கும் விஷால் (மார்க்) கையில் இந்த டைம் டிராவல் தொலைபேசி கிடைக்கிறது.


தன்னுடைய இறந்து போன தன் அப்பா விஷால் (ஆண்டனி) தான் அம்மாவை கொன்றான் என்றும், அவன் மிகவும் மோசமானவன் என்றும் வயதான எஸ்.ஜே.சூர்யாவை (ஜாக்கி பாண்டியன்) அப்பாவாக நினைத்து சிறு வயதிலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மகன் விஷால்.


இந்நிலையில் டைம் டிராவல் தொலைபேசியை வைத்து தன் அம்மாவை மரணத்திலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் விஷால். இந்த முயற்சியில் தன் தந்தை நல்லவர்,,,, மேலும் தன் தந்தையை கொன்றது எஸ்.ஜே.சூர்யா (ஜாக்கி பாண்டியன்) என்றும் தெரிந்துக் கொள்கிறார். இதனால் தன் தந்தையை காப்பாற்றி நிகழ் காலத்திற்கு கொண்டு வர விஷால் முயற்சி செய்கிறார்.


முடிவில் டைம் டிராவல் தொலைபேசியை வைத்து தன் தந்தையை நிகழ் காலத்திற்கு விஷால் அழைத்து வந்தாரா ?

விஷாலின் அம்மாவை கொன்றது யார்?, வயதான எஸ்.ஜே.சூர்யா தன் மகனை விட விஷால் மீது அதிக பாசம் காட்டுவது எதற்காக ? என்பதற்கான விடை சொல்லும் படம்தான் ‘மார்க் ஆண்டனி’.


ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடிக்கும் விஷால் ஆக்ரோஷ அதிரடி நாயகனாக சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்,, மகனாக மார்க் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் சாதுவான

எதிர்மறையான வேடத்தில் நடித்தாலும் பல காட்சிகள் எடுபடாமல் போகிறது .


நாயகன் விஷாலுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜொலிக்கிறார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களில் படத்தின் பக்க பலமாய் ரசிகர்கள் கொண்டாடும் நடிப்பில் கதையை காப்பாற்ற போராடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.


கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நாயகியாக நடிக்கும் ரிது வர்மா


சுனில் ,ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரா, அனிதா சம்பத் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் !!


அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் ,,ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் படத்திற்கு பக்க பலம் .


வித்தியாசமாக புதுமையான முறையில் தொலை பேசியில் டைம் டிராவலை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை , இரண்டாம்பாதிக்கு பின் திசை மாறும் திரைக்கதையினால் சில காட்சிகளில் தொய்வு ஏற்படுகிறது ..இருப்பினும் அறிவியல் ரீதியான கதையில் டைம் டிராவலர் தொலைபேசி என்கிற புதிய யுக்தியை பயன்படுத்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.


ரேட்டிங் ; 3 / 5



bottom of page