top of page

“இந்த கிரைம் தப்பில்ல” பட விமர்சனம் !

  • mediatalks001
  • Oct 6, 2023
  • 1 min read

கிராமத்திலிருந்து வந்து நகரத்தில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்யும் மேக்னா ஏலனை நண்பர்களான மூன்று இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலிக்கிறார்கள்.


மற்றொரு பக்கம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்களை தடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி ஆடுகளம் நரேன்,,, பாண்டி கமல் தலைமையில் சில இளைஞர்களுடன் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடத்தி வந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றார்.


ஒரு கட்டத்தில் இவர்கள் மூவரையும் காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி மேக்னா ஏலன் ரகசிய இடத்திற்கு வரவழைக்கிறார்.


காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி மேக்னா ஏலன் வரவழைக்கும் அந்த மூன்று இளைஞர்களும் ஆடுகளம் நரேன் முன்னிலையில் பாண்டி கமலின் ஆட்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் .


முடிவில் மேக்னா ஏலன் காதலிப்பது போல நடித்து மூவரையும் ரகசிய இடத்திற்கு வரவழைக்கும் காரணம் என்ன?


ஆடுகளம் நரேன் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடத்தி வந்து அடித்து துன்புறுத்தி எதற்காக கொலை செய்கின்றார் என்பதை சொல்லும் படம்தான் 'இந்த கிரைம் தப்பில்ல'


நாயகியாக அழகான மேக்னா ஏலன்,,,ஆடுகளம் நரேன், பாண்டி கமல், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை நடிப்பில் சிறப்பாக செய்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் -ஏ எம் எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பாளர்-ராஜேஷ்,கண்ணன், அஜித் குமார், சண்டை-கணேஷ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணி புரிந்துள்ளார்கள்.


நாட்டில் நடக்கும் அட்டூழிய குற்றங்களான பாலியல் வன்முறை செய்தவர்களை கண்டுபிடித்து பாதிக்க பட்டவர்களே தகுந்த தண்டனையை வழங்கும் கதையை மையமாக வைத்து சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் சமூக அக்கறையுடன் கலந்த பொழுதுபோக்கு படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தேவகுமார்.


ரேட்டிங் ; 2 / 5

Bình luận


©2020 by MediaTalks. 

bottom of page