காதல் ஜோடிகளான அஞ்சு ஓண்டியாவும் அகில் பிரபாகரும் ஜாலியாக இன்ப சுற்றுலாவாக காட்டு பகுதிக்கு செல்கின்றனர். இதில் அகில் பிரபாகர் முன்னாள் அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் ஆவார் .
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கவன அறிவிப்பு பலகையை பார்க்காமல் காதலர்கள் இருவரும் மாலை 6 மணிக்கு மேல்
ரூட் நம்பர் 17 வழியாக செல்கின்றனர் .
அந்நேரத்தில் கொடூரமான ஜித்தன் ரமேஷிடன் இளம் ஜோடி சிக்கிக் கொள்கின்றனர்.
அதே பகுதியில் இருக்கும் ஒரு பாதாள அறையில் இருவரையும் அடைத்து வைத்து அவர்களை கொடுமைப் படுத்துகிறார் ஜித்தன் ரமேஷ் .
காதலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் போலீசாருக்கு தெரிந்ததும்
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.
அந்த காட்டுப் பகுதியில் அடிக்கடி இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வருகிறது.
முடிவில் மர்ம சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் கொடுரமான ஜித்தன் ரமேஷ் யார் ?
சைக்கோ வில்லனான ஜித்தன் ரமேஷ் செய்யும் கொலைகளுக்கு பழிக்குப்பழிதான் காரணமா ? போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் காதலர்கள் சிக்கினார்களா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ரூட் நம்பர் 17’
சைக்கோ வில்லனாக நாயகனாக நடிக்கும் ஜித்தன் ரமேஷ் அதிகம் பேசாமல் மிரட்டலான நடிப்பில் ரசிகர்களே மிரளும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
காதல் ஜோடிகளாக நடிக்கும் அஞ்சு ஓண்டியா - அகில் பிரபாகர் ,அமைச்சராக நடிக்கும் ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கும் அருவி மதன்.ஜென்னிபர் ,மாஸ்டர் நிஹால் , டைட்டஸ் ஆபிரகாம் ,பிரோலிக் ஜார்ஜ் , என நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவும்,கலை இயக்குநர் பேபோர் முரளியின் கலை பணியும் .பட தொகுப்பாளர் அகிலேஷ் மோகனின் பட தொகுப்பும் படத்திற்கு பக்க பலமாக இருக்கின்றன .
காட்டுப்பகுதியில் கடத்தப்படும் காதல் ஜோடி அதன் பின் அடுத்தடுத்து நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்து கதையுடன் பயணிக்கும் வேகமான திரைக்கதையுடன் ஜித்தன் ரமேஷின் காட்சிகளில் இறுதியில் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதுடன் திரில்லருடன் சேர்ந்த திகில் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.
ரேட்டிங் ; 3.5 / 5
Comments